திங்கள், 17 ஏப்ரல், 2017

புதிய வாடகை தாய் மசோதா ... டாக்டர்கள் வக்கீல்கள் எதிர்ப்பு?


புதுடில்லி:லோக்சபாவில் தாக்கல் செய்யப் பட்டுள்ள வாடகை தாய் மசோதாவுக்கு, வக்கீல் கள், டாக்டர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.< குழந்தை இல்லாத தம்பதிகள், வாடகை தாய் மூலம், குழந்தை பெற்றுக் கொள்வது, இந்தியா உட்பட பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. சமூக நோக்கத்துடன் துவங்கப்பட்ட இந்த திட்டம், தற்போது, வியாபாரமாக மாறி வருகிறது. இதனால், பல மோசடிகள் நடக்கின் றன; இதை தடுக்க, மத்திய அரசு, புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா, லோக்சபாவில், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவில், 'வெளிநாட்டு தம்பதியினர், இந்திய பெண்களை வாடகை தாயாக பயன் படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 'திருமணம் < செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வாழ்க்கை துணையை பிரிந்து வாழ்பவர்கள், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.


'சட்டப்பூர்வமாக திருமணம் செய்து, குழந்தையில் லாத தம்பதி மட்டுமே, வாடகை தாய் மூலம் குழந்தையைபெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. குழந்தையில்லா தம்பதியின், நெருங்கிய உறவினர் தான், வாடகை தாயாக இருக்க வேண்டும்' என்பது உட்பட, பல ஷரத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த மசோதா, பார்லி மென்ட், மழைக்கால கூட்ட தொடரில், நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு, டாக்டர்கள், வக்கீல்கள் பலர், கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:

வாழ்க்கை துணையை பிரிந்து வாழ்பவர்கள், குழந்தையை தத்து எடுத்து வளர்க்க அனுமதி உள்ளது. அப்படியிருக்கையில், வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள, அவர்களுக்கு அனுமதி மறுப்பது சரியல்ல. மேலும், ஓரினச் சேர்க்கையாளர்கள் பெற்றோர் ஆகும் உரிமையை, இந்த மசோதா பறிக்கிறது. நெருங்கிய உறவினர் தான், வாடகை தாயாக இருக்க வேண்டும் என கூறுவதும் தவறு. ஏனெனில், இதனால், அந்த< குழந்தையின் எதிர்காலம் பாதிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறுஅவர்கள் கூறினர்.எனினும், மூத்த வக்கீலும், இந்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள வருமான ஷேகர் நபாடேகூறியதாவது.

தற்போது, நடிகர், நடிகையர் மற்றும் சமூகத் தில் பிரபலமானவர்களுக்கு, திருமணமே செய்து கொள்ளாமல், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது, 'பேஷன்' ஆகி விட்டது. திருமணமான தம்பதியும், இனி குழந்தை பிறக்காது என, டாக்டர்கள் உறுதி அளித்த பின்தான், வாடகை தாய் மூலம், குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.  தினமலர்

கருத்துகள் இல்லை: