வெள்ளி, 21 ஏப்ரல், 2017

தீபா மீது புகார் : விண்ணப்பம் விற்றதில் மோசடி?

தீபா மீது புகார் : விண்ணப்பம் விற்றதில் மோசடி?
அரசியல் பிரவேசமே இன்னும் முழுதாக அரங்கேறவில்லை. அதற்குள் தீபா மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மீது, சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பலகோடி ரூபாய் மோசடி என நேற்று (21.4.2017) புகார் அளிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து விண்ணப்ப படிவம் விற்றதில் மோசடி செய்துள்ளதாக நெசப்பாக்கம் ஜானகிராம் என்பவர் தீபா மீது புகார் கொடுத்திருக்கிறார்.
ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய பேரவையை தொடங்கினார். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்று பெயர்வைத்து கொடியை அறிமுகம் செய்தார்
தீபாவின் டிரைவர் ராஜாவின் ஆலோசனைப்படிதான் ‘எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை' ஆரம்பிக்கப்பட்டது என்று அப்போது தகவல் வெளியானது.
ஒரு விண்ணப்பத்துக்கு தலா 10 ரூபாய், ஒரு விண்ணப்பத்துக்கு 25 உறுப்பினர்கள் வீதம் 250 ரூபாய்னு கிட்டத்தட்ட 7 கோடிக்கும்மேல் வசூலானதாகக் கூறப்படுகிறது. ஒன்றியச் செயலாளர் பதவிக்கு ரூ.5 லட்சம், மாவட்டச் செயலாளர் பதவிக்கு ரூ.10 லட்சம் என்று வசூலித்தனர் என்றெல்லாம் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில்தான் தீபாவின் கணவர் மாதவன், டிரைவர் ராஜா இடையே சிக்கல் உருவானது. இதில் ஒரு பெட்டியில் பணத்தை எடுத்துக்கொண்டு மாதவன் வெளியேறியதாக புகார் எழுந்தது. இந்த நிலையில்தான், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து வெளியேறுவதாகக் கூறி தனிக்கட்சி தொடங்குவதாக கூறினார் மாதவன். எம்.ஜி.ஆர்.-அம்மா தீபா பேரவையின் அங்கீகாரமே ரத்தாகிவிட்ட சூழ்நிலையில் தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பலகோடி ரூபாய் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: