சனி, 22 ஏப்ரல், 2017

திருமுருகன் காந்தி :கீழடி தொல்லியல் சான்றுகள் மீது ஆரிய திணிப்பு ,,, முறியடிப்போம் அணிதிரளுங்கள்


கீழடி’யில் ஆரிய அடையாளங்களோ, சின்னங்களோ, சமஸ்கிருத எழுத்துக்களோ கிடைக்காமல் முற்றும் முழுதாக தமிழர் நாகரிக தொல்லியல் சான்றுகள் அமைந்திருக்கின்றன. இந்த சான்றுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படுமானால் இந்தியா சமஸ்கிருதத்தினை தொன்மையான மொழியாக கொண்ட நாடு எனும் பித்தலாட்டம் அம்பலப்படும். ஆகவே ஆரிய அடையாளங்களை கீழடியில் வலிந்து திணிக்க மோடி-பாஜக அரசு முயல்கிறது. இதற்கு தடையாக இருக்கும் மரியாதைக்குரிய தொல்லியல் அறிஞர் அமர்நாத் அவர்களை இடமாற்றம் செய்துவிட்டு பார்ப்பனர் சிரிராம் என்பவரை அமர்த்த முயல்கிறது.
இது போன்ற அயோக்கியத்தனத்தை நேரடி மேற்பார்வை மூலம் நடத்தவும், ஆரிய தொல்லியல் அடையாளத்தை திணிப்பதற்காகவும் ’பாஜக-மோடியின்’ பண்பாட்டுத்துறை மத்திய அமைச்சர் ’மகேஷ் சர்மா’ வருகின்ற 28 ஏப்ரலில் கீழடிக்கு நேரடியாக வர இருக்கிறார். இவர் ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். ஆரிய இனவெறிக்கும், மதவெறிக்கும் பேர் போனவர்.
>அயோத்தியாவிலும், இலங்கையிலும், இன்னும் பிற இடங்களிலிம் ராமாயண கண்காட்சியை அமைக்க 250 கோடி ரூபாயை ஒதுக்கியவர்.
மோடி அரசின் இந்த திட்டம், தமிழர்களின் தொல்லியல் சான்றுகளை ஆரிய மயமாக்கும் முயற்சியாகும்.
தமிழர் வரலாற்றினை மாற்றி எழுதும் வேலையை இந்துத்துவ செய்வதை ஒட்டு மொத்த தமிழகமும் திரண்டு தடுத்தாக வேண்டும்.
வரும் 28 ஏப்ரல், மதுரை கீழடியில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்திற்கு மே17 இயக்கம் அழைப்பு கொடுக்கிறது.
தமிழகத்தின் அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் வெகுண்டெழ வேண்டும். இந்த அயோக்கியத்தனத்தை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
தமிழகத்தின் அனைத்து திசைகளிலும் இருந்து தமிழர்களே மதுரையில் திரளுங்கள். வரலாற்றை உயிரைக்கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டும். ஆரிய பொறுக்கிகளை விரட்டியடிக்க கைகோர்க்க வாருங்கள்.
28 ஏப்ரல்-வெள்ளிக்கிழமை காலையில் மதுரை கீழடியில் திரளுவோம்.
உயிரே போனாலும் தமிழரின் தொல்லியல் சான்றுகளை திரிக்க அனுமதிக்க மாட்டோம் எனும் முழக்கத்தோடு ஒன்று திரள்வோம்.
தமிழக இயக்கங்களே, தமிழ் ஆர்வலர்களே, இளைஞர்களே, மாணவர்களே வெகுண்டெழுங்கள்..
தமிழர்களை கருப்பினராக இருந்தாலும் சகித்து வாழ்கிறோம் என்ற இனவெறியோடு பேசிய பாஜக பொறுக்கி கும்பலை விரட்டி அடிப்போம்.
ஆயிரக்கணக்கில் திரள்வோம். முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: