வியாழன், 20 ஏப்ரல், 2017

பொதுத்தேர்தலில் ஒப்புகைச் சீட்டு அறிமுகம் ... மின்னணு இயந்திர மோசடிகள் தொடரும்?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீதான நம்பிக்கை இழந்துவிட்டதால், இனி வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 16 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தன.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'வரும் 2019இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஒப்புகைச் சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் 3171கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கைகள் காரணமாகத்தான் இந்த முடிவு எடுக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்புகைச் சீட்டு முறை நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது சில தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டது. மேலும் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கும் பயன்படுத்தபட இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: