அந்நியச் செலாவணி முறைகேடு வழக்கு தொடர்பாக,
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் வாசன்
ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை ஆணை அனுப்பியுள்ளது.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையானது ராஜஸ்தான், ஹிகித்சா ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனத்தின் மீது, ஆம்புலன்சுகளை முறைகேடாக இயக்கியதாகக் கூறி கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அமலாக்கத் துறை திங்கள்கிழமை (இன்று) நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக, வாசன் ஹெல்த் கேர் மூலம் நடந்த கருப்புப் பண பரிவர்த்தனையில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு, 45 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக அமலாக்கத் துறை தற்போது ஆணை அனுப்பியுள்ளது. அதேபோல், 2,262 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கும் தற்போது அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக