வியாழன், 20 ஏப்ரல், 2017

விஷால் : திரைப்படத்தின் காட்சிகள் பாடல்கள் தொலைக்காட்சிகளுக்கு இலவசமாக கொடுக்கவேண்டாம்!

தயாரிப்பாளர்களின் வளர்ச்சிக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதியோடு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் விஷால்.. அதிரடியாக ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் விஷால் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ‘அன்புள்ள திரைப்பட முதலாளிகளுக்கு நமது திரைப்படத்தின் பாடல்கள், கிளிப்பிங்ஸ் மற்றும் டிரைலர் போன்ற எதுவும் இனி எந்த ஒரு தொலைக்காட்சிக்கும்… இன்று முதல் இலவசமாக தர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். மானம் காப்போம், வருமானம் பெருக்குவோம்’  என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   ரெட்டிகாரு ரோம்பதாய்ன் துள்ளுராறு ரொம்ப நாளைக்கு தாங் காது ... காது
இதற்கு காரணமாக அவர் கூறியுள்ள விளக்கத்தில், இதுவரை தயாரிப்பாளர்கள் தங்களது படங்கள் ரசிகர்களிடம் எளிதில் சென்றடைய வேண்டும் என்ற விளம்பர நோக்கத்துடன் சாட்டிலைட் தொலைக்காட்சிகளுக்கு டிரைலர், கிளிப்பிங்ஸ் ஆகியவற்றை இலவசமாக கொடுத்து வந்தனர். ஆனால் இந்த டிரைலரையும் கிளிப்பிங்ஸ்களையும் வைத்தே பல நிகழ்ச்சிகளை உருவாக்கி சாட்டிலைட் சேனல்கள் பணம் சம்பாதித்து வருவதால், தற்போது தயாரிப்பாளர் சங்கம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  மாலைமலர்


கருத்துகள் இல்லை: