வியாழன், 20 ஏப்ரல், 2017

வருமான வரி சோதனைகளால் கட்சியையும், ஆட்சியையும், நாட்டையும் கா(கூ)ட்டி கொடுக்கும் அமாவாசைகள்

பிடியை இறுக்கிவிட்டது டெல்லி! வேதனைப்படும் அமைச்சர்கள்!
கடந்த 3 நாட்களாக அதிமுகவில் இரு அணிகள் இணைப்பு என்ற பேச்சுவார்த்தையோடு பரபரப்புகள் நிலவி வந்தது. இதற்கு பின்னணியில் பாஜக தலைமைதான் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியான சம்பவங்கள்தான், கடந்த இரண்டு நாட்களாக நடைப்பெற்று வந்தது. திடீரென சசிகலா குடும்பத்தை ஒத்திவைத்துவிட்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவதாகவும் பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவதாகவும் மூத்த அமைச்சர்தகள் கூறினார்கள். இதற்கு ஓ.பி.எஸ். தரப்பிலும் வரவேற்பை கொடுத்தார்கள். கடந்த இரண்டு மாதமாக கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமை செலுத்தி வந்த துணைப்பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், திடீரென 'நான் ஒதுக்கிவிட்டேன்' என்று சாதாரணமாக கூறிவிட்டு வீட்டுக்கு போய்விட்டார். இவற்றிக்கெல்லாம் காரணம் பாஜகவினுடைய கடுமையான நெருக்கடிதான் என ’கூறப்படுகிறது.


இதற்கிடையே இன்று இரண்டு அணிகளும் பேச்சுவார்த்தை சமூகமாக செல்லும் என எதிர்பார்த்திருந்தது.ஆனால் ஓ.பி.எஸ். அணி தங்களது கருத்துக்களை இன்று வலுவாக கூறியுள்ளது. அதில் முக்கியமானது பொதுச்செயலாளரான சசிகலா, துணைப்பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் ஆகிய இருவரிடமும் ராஜினாமா கடிதம் பெற்று, அதை சட்டப்படி அறிவிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் இவர்கள் கொடுத்த பிரமாணப் பத்திரத்தை திரும்ப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதோடு சசிகலா குடும்பத்தினரைச் சேர்ந்த அத்தனை நபர்களையும் விலக்கியதாக அறிவிப்பு வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதைக் கேள்விப்பட்ட அமைச்சர்கள் இதன் பின்னணியை கண்டு அதிர்ந்துள்ளார்கள். அவர்கள் தரப்பில் இருந்து நமக்கு கிடைத்த தகவல், பாஜக தலைமை சுத்தமாக தங்கள் கைக்குள் அதிமுகவை கொண்டு சென்றுவிட்டது. சசிகலா குடும்பம் முழுமையாக அப்புறப்படுத்துவது என்பது ஒரு புறம் இருக்க, தற்போது உள்ள அமைச்சர்கள் பலரையும் விடுவிக்கும் திட்டமும் அவர்களிடம் உள்ளது. ஓ.பி.எஸ். தலைமையில் கட்சியையும் ஆட்சியையும் கொடுத்து புதிய அமைச்சரவையில் தற்போது உள்ள பலபேர் இருக்க மாட்டார்கள் என திட்டமிட்டுள்ளார்கள். முழுக்க முழுக்க பாஜகவுக்கு துணைபோகக் கூடிய ஒரு நிர்வாகத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுவிட்டார்கள். அதன் விளைவாகத்தான் இன்று ஓ.பி.எஸ். அணியில் உள்ள முனுசாமியின் கருத்துக்கள் வந்துள்ளது.

தற்போது தொண்டர்கள் எதிர்பார்ப்பது கட்சி ஒன்றிணைய வேண்டும். சின்னம் கிடைக்க வேண்டும் என்பது. அமைச்சர்களாகிய நாங்கள் எதிர்பார்ப்பது ஓ.பி.எஸ். உள்பட இப்போது உள்ள அமைச்சரவை நீடிக்க வேண்டும் என்பது. ஆனால் ஊழல், முறைகேடு செய்தவர்களோடு நீங்கள் இணக்கி போகாதீர்கள் என தொண்டர்கள் சொன்னதாக முனுசாமி கூறியிருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம், ஆக இப்போது உள்ள அமைச்சர்கள் பலரை நீக்க வேண்டும் என்றுதான் அர்த்தம். அதற்குத்தான் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு முன்பே இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்கள். இதையெல்லாம் வைத்துத்தான் பாஜகவின் ஆட்டம் எங்களை வேதனைப்பட வைத்துள்ளது என கூறினார்கள்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: