செவ்வாய், 18 ஏப்ரல், 2017

நவீன திருமூலர்’ எழுத்தாளர் மா. அரங்கநாதன் காலமானார்

thetimestamil.com :திருப்பூர் கிருஷ்ணன்: எழுத்தாளர் மா.அரங்கநாதன் இன்று(16-4-2017) புதுச்சேரியில் காலமானார். மா. அரங்கநாதன் “வீடுபேறு’, “ஞானக்கூத்து’, “காடன் மலை’ போன்ற சிறுகதை நூல்களையும், “பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலையும், “பஃறுளியாற்று மாந்தர்’ என்ற புதினத்தையும் எழுதியவர்,
இவரைப் பற்றி ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்ரமணியன். நாற்பது நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த ஆவணப்படத்தின் பெயர் “மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்’.
“முன்றில்‘ இலக்கிய இதழை நடத்திய பெருமையும் அரங்கநாதனுக்கு உண்டு. சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணிபுரிந்தவர் அரங்கநாதன். நீதிபதியும் சிறந்த ஆன்மிகப் பேச்சாளருமான ஆர். மகாதேவன் இவரது புதல்வர். (தொலைபேசி 09444031255).

இளங்கோ கிருஷ்ணன்:
மா.அரங்கநாதன் தமிழில் தனித்துவமான எழுத்தாளர். அகவயமான கதைகள் எழுதியவர். சிறுகதைகளில் சிறப்பாக இயங்கியவர். அவர் கதைகளில் சித்தர் மெய்யியலின் மிஸ்டிசிசம் இருந்தது. நவீன எழுத்தாளர்களில் அரங்கநாதனிடமே தமிழின் மரபான மெய்யியல் துலக்கமுறுகிறது. தமிழ் மதம், தமிழ் கலை என்று சிந்தித்தவர்.
புதுமைப்பித்தன் மெளனியை ‘ நவீன திருமூலர்’ என்கிறார். உண்மையில் அந்தப் பட்டம் மா.அரங்கநாதனுக்கே முழுமையாகப் பொருந்தும். முன்னோடிக்கு என் அஞ்சலிகள்!
சண்முகம் சுப்ரமணியம்:
தமிழின் மூத்த சிறுகதையாசிரியர்
திரு. மா.அரங்கநாதன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
<
div class=”text_exposed_show”>
அவரது இறுதி சடங்கு புதுவையில் நாளை மாலை (17-4-2017) 4-00 முதல் 6.00 மணிக்குள்ளாக நடைபெறுதிகிறது.
No. 3, 4th cross street
Venkata Nagar
Pondicherry
(Near: Tamizh Sangam Building)
சமயவேல்:
எனது பேரன்புக்குரிய நண்பர் மா.அரங்கநாதன் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சென்னை பழவந்தாங்கலில் ஓராண்டு இருந்தபோது தினமும் அவரை சந்தித்து வந்தேன். மாலையில் இருவரும் வாக்கிங் போகத் தொடங்கினோம். சிற்பக்கலையை வைணவம் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறது என நான் ஏன் எழுதினேன் என்று தொடங்கிய உரையாடல் பல திசைகளிலும் விரிந்தது. தமிழ் நிலம், மொழி, பண்பாடு, கலைகள் எல்லாம் குறித்த அவரது ஆழ்ந்த புலமையிலிருந்து, ஒரு மாணவனாக நான் கற்றுக் கொண்டது ஏராளம். அவர் பிறந்த ஊரான ஆரல்வாய்மொழி பற்றி நிறைய பகிர்ந்து கொண்டார். அவரது சிறுகதைகளில் இருந்த Mysticism முழுக்க தமிழ் சித்தர்களின் மாயையியல் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால் அது அப்படியான ஒரு சித்த வாழ்விலிருந்து மட்டுமே வரமுடியும். அவருக்குள் வாழ்ந்த சித்தரையும் அறிந்து கொண்டேன். பாண்டிச்சேரி சென்று அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலே போனது.
அஜயன் பாலா:
வேறு மாநில டயணம் காரணமாக மா.அரங்கநாதன் இறுதியாத்திரையில் கலந்து கொள்ளமுடியாத சூழல் வருத்தமளிக்கிறது. அகநாழிகை வாசுதேவன் தான் என்னை சென்னைக்கு அழைத்து வந்து முன்றில் இலக்கிய முகாமில் அறிமுகம் செய்தான். தொடர்ந்து. என் சென்னை வாழ்க்கையின் முதல் மூன்று ஆண்டுகள் ஏறக்குறைய தினசரி மாலை அவரோடுதான். மாலை முன்றில் புத்தக கடையிலும் இரவு கடை மூடியபின் மாம்பலம் நிலையத்தில் தொடர்வண்டியில் ஏறி பழவந்தாங்கல் நிலையத்தில் இறங்கி வீடு வரை பேசிக்கொண்டே கழித்திருக்கிறேன். .நவீன இலக்கியம் தாண்டி தத்துவம். தமிழ மரபு தொன்மம் சைவநெறி ஆகிவற்றை குறித்து 24மணிநேரமும் தீவிரமாக சிந்தித்துக்கொண்டே இருப்பவர். ஹாலிவுட் சினிமாக்களின் காதலன். எ 40 50 60களின் படங்கள் பற்றியும் நடிக நடிகையர் இயக்குனர்கள் குறித்து தகவல் களஞ்சியமாக கொட்டிக்கொண்டேயிருப்பார். நேரம் வாய்க்கும்போது கட்டுரை எழுதவேண்டும்.
அகநாழிகை பொன்வாசுதேவன்:
எந்த வெளிச்சங்களையும் தேடாத, தன்னை எங்கும் பிரதிநிதித்துவமும் செய்து கொள்ளாத , எளிமையின் பேருருவான எனது மதிப்பன்பிற்குறிய, எழுத்தாளர் “முன்றில்’ மா. அரங்கநாதன் அய்யா அவர்கள் புதுச்சேரியில் இன்று காலமானார். மனோ மோகன் திருமணத்திற்கு புதுச்சேரி சென்ற போது எழுத்தாளர் ரவி சுப்பிரமணியனுடன் கடைசியாகச் சந்தித்தேன். அவருடைய பணி ஓய்வு காலத்திற்குப் பிறகு நடத்திய முன்றில் புத்தகக் கடைக்கு என் இலக்கிய வாசிப்பிலும், எழுத்திலும் பெரும்பங்கு இண்டு. நான் என் அண்ணா என்று அன்புடன் அழைக்கும் தற்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை நீதியரசர் ஆர்.மகாதேவன் அண்ணா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். மா.அரங்கநாதன் அப்பாவுடைய சிறுகதைகள் தனித்துவமானவை. அவருடைய பெரும்பாலான கதைகளின் கதாபாத்திரமான முத்துக் கறுப்பன் என்றும் நம்மோடிருப்பான்   //www.maaranganathan.com/

கருத்துகள் இல்லை: