கடந்த வெள்ளிக் கிழமை தமிழ் புத்தாண்டு அன்று மூன்று தமிழ் படங்கள
ரீலீஸ் ஆகின. அதற்கு முந்தைய தினம் 4500 கோடி பட்ஜெட்டில் தயாரான Fast Furious 8 ஆங்கிலப் படம் தமிழகத்தில் ரீலீஸ் ஆகி வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருந்தது.;
12 கோடி சம்பளம் வாங்கும் ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா, 4 கோடி சம்பளம் வாங்கும் ஆர்யா நடித்த கடம்பன், 10 கோடி சம்பளம் வாங்கும் தனுஷ் முதன் முறையாக இயக்கி நடித்துள்ள ப பாண்டி ஆகிய மூன்று படங்களும் முதல் நாள் முதல் காட்சிக்கு அரங்கு நிறைக்க போராடின.
முதல் நாள் வெளியான ஆங்கில படமோ எவ்வித ஆரவாரம் இன்றி தமிழகம் முழுவதும் திரையிட்ட தியேட்டர்கள் அரங்கு நிறைந்து காணப்பட்டது. ஆங்கிலப் படங்களுக்கு எந்த விதமான தமிழ் படங்களை போன்று பிரம்மாண்டமான விளம்பரங்கள் தமிழ்நாட்டில் செய்யப்படுவது இல்லை. பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ஆள்வைத்து புரமோஷன் செய்வதில்லை. தமிழ் தொலைக்காட்சிகளில் சிறப்பு நேரலை கிடையாது. ஆனால் 250 தியேட்டர்களில் வெளியாகும் முண்ணனி ஹீரோ நடித்த தமிழ்ப் படம் வசூலிக்கும் தொகையை 200 தியேட்டர்களில் வெளியாகும் ஆங்கில படம் மூன்று நாட்களில் வசூலித்து விடுகிறது.
இதனால் ஆங்கில படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் தங்கள் அரங்கில் 2 K, 4 K எனும் புதிய தொழில் நுட்ப கருவிகளை அமைக்க தொடங்கியுள்ளனர்.
தமிழ் படங்கள் திரையிடும் தியேட்டர்கள் மேம்படுத்தப்பட்டு இருந்தாலும் ரசிகன் வருகை குறைவாக உள்ளது. தமிழ் படங்கள் ரீலீசுக்கு முன்பே அப்படத்தை விளம்பரப்படுத்த கையாளப்படும் விளம்பரங்களில் அதிகபட்ச பொய், மிகைப்படுத்தல் திணிக்கப்படுகிறது. அதனை பூர்த்தி செய்கிற வகையில் படங்கள் இல்லை என்கிற போது ஏமாற்றமடைகிற ரசிகன் நல்ல படங்கள் வரும் போது பழைய மனநிலையில் படங்களை புறக்கணிக்கிறான்.
ப பாண்டி நல்ல படமாக இருந்தும் தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி இப்படத்தை பாதித்திருக்கிறது. பேய், வடிவேலு போன்ற காரணங்கள் சிவலிங்காவுக்கு கை கொடுத்தாலும், பழைய ஓபனிங் இல்லை.
நடிகர் ஆர்யாவுக்கு என தனியான ரசிகர் வட்டமோ, பார்வையாளர்களோ இங்கு இன்னும் உருவாகவில்லை அதன் விளைவு 22 கோடியில் தயாரான கடம்பன் மிகப் பெரிய தோல்வி படமாகி விட்டது.
சிவலிங்கா தயாரிப்பாளருக்கு லாபத்தையும் படம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பா.பாண்டி நடிகர் தனுஷ் சொந்த தயாரிப்பு என்பதாலும், படத்தை யாருக்கும் விற்பனை செய்யாததால் லாபமோ, நஷ்டமோ அவருக்கு மட்டுமே. tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக