8
நாட்கள் தான் இருக்கிறது பாகுபலி 2 ரிலீஸுக்கு. நாட்கள் குறைய குறைய
பாகுபலி 2 படத்தின் பிரச்னை மட்டும் அதிகரித்தபடியே இருக்கிறது.
தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே ஏற்பட்ட காவிரி நதிநீர்
பிரச்னையின்போது சத்யராஜ் கர்நாடகாவை விமர்சித்துப் பேசியதற்காக பாகுபலி 2
திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்யவேண்டும் என வட்டாள் நாகராஜ் உட்பட
கர்நாடகாவில் இயங்கும் பல்வேறு அமைப்புகள் முடிவு செய்திருக்கின்றன.
பிரச்னை உருவான இத்தனை நாட்களாக சத்யராஜுக்கும் படத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. படத்தில் நடித்தார். அதற்கான பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். படத்தைத் தடை செய்வதால் சத்யராஜுக்கு எவ்வித பாதிப்பும் வரப்போவதில்லை என்று இத்தனை நாட்களாக பேசிவந்த ராஜமௌலி இப்போது இந்த பிரச்னை குறித்து சத்யராஜிடம் என்ன பேசினார் என்பதை வெளியிட்டிருக்கிறார்.
இந்த பிரச்னை உருவானதும் நான் சத்யராஜுக்கு ஃபோன் செய்து பேசினேன். இதனால் ஏற்படும் பாதிப்பு என்னவென்பதை விளக்கிவிட்டேன். என் தரப்பிலிருந்து இவ்வளவு தான் செய்ய முடியும். மற்றவை அவரது விருப்பம் தான். சத்யராஜின் செயல்களுக்காக இத்தனை ஆயிரம் பேர் சேர்ந்து உழைத்த உழைப்பை உதாசினப்படுத்துவது எப்படி சரியாகும் எனக் கூறியிருக்கிறார்.
பாகுபலி 2 திரைப்படத்தின் புரமோஷன்கள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், சத்யராஜின் மகன் சிபி ராஜின் கட்டப்பாவக் காணோம் படமும் ரிலீஸாகிவிட்டதால் இருவரும் சம்மர் வெகேஷனைக் கொண்டாட எப்போதோ வெளிநாட்டுக்குக் கிளம்பிவிட்டனர். சத்யராஜ் இந்தியாவில் இல்லாததால் இந்த பிரச்னை குறித்து அவர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. சத்யராஜ் மன்னிப்பு கேட்காமல் படத்தை ரிலீஸ் செய்வதாக இல்லை என்பதில் முடிவாக இருக்கின்றனர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக