ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

சீமான் :தமிழர்களை இழிச்சவாயர்களா? தினகரனை மட்டும் கைது செய்தது ஏன்? காசு வாங்கியவன் யார்?

டிடிவி தினகரனை மட்டும் கைது செய்தது ஏன் தமிழர்கள் இளிச்சாவாயர்களா? என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார்.
By: Mayura Akilan சென்னை: தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைத்துக்கொண்டு மத்திய அரசு பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து வருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக யாரோ ஒருவன் கூறியதை வைத்து தினகரனை கைது செய்தது என்றும் அவர் கேட்டுள்ளார். இரட்டை இலைக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட டிடிவி தினகரனை பெசன்ட் நகரில் வைத்து விசாரணை நடத்தினர். அவரது மனைவியிடமும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 டிடிவி தினகரன் வீட்டிற்கு ஆதரவாளர்கள் அதிகம் வருவதில்லை. நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சிலர் மட்டுமே வந்து செல்கின்றனர். ஆனால் செய்தியாளர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. டிடிவி தினகரன் பற்றிய எதிர்மறையாக செய்திகள் ஊடகங்களில் வெளியாவதால் அதிமுக தொண்டர்களுக்காக சில ஆதரவாளர்களைப் பிடித்து அவர்களின் பேட்டிகளை ஒளிபரப்புகின்றனர். அவர்களும் தினகரனுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இதனிடையே டிடிவி தினகரன் கைது அதைத் தொடர்ந்து நடைபெறும் விசாரணை பற்றி கருத்து கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் சீமான்,
எனவோ ஒரு கேடிப்பயல் சொன்னதை வைத்து டெல்லி போலீஸ் வழக்கு போட்டிருப்பது நியாயமற்றது என்று கூறியுள்ளார்.
கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய அவன் கூறியதை வைத்து வழக்கு போடுவது முறையாகாது.
தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைத்துக்கொண்டு மத்திய அரசு சித்து விளையாட்டு விளையாடுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்றால், அந்த லஞ்சப்பணத்தை வாங்க முயன்ற அதிகாரி யார் என்ற தகவலை வெளியிடாதது ஏன் ? தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்களா? என்றும் சீமான் கேட்டுள்ளார்.  tamiloneindia

கருத்துகள் இல்லை: