ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

திக் விஜய் சிங் காங்கிரஸ் பொதுசெயலாளர் பதவியில் இருந்து நீக்கம்!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து திக்விஜய் சிங் நீக்கம்
கோவா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து திக்விஜய் சிங் நீக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து திக்விஜய் சிங் நீக்கம் புதுடெல்லி: கோவா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறும், சிறிய கட்சிகளின் ஆதரவை பெற முடியாததால் ஆட்சியமைக்க முடியவில்லை. பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் பதவியேற்றார். பா.ஜ.க. குதிரைபேரத்தில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.க்களை வாங்கி ஆட்சியமைத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மாநில மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததற்காக கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் வலியுறுத்தினார்.

மேலும், கோவா பார்வர்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்காதது தங்கள் தவறு என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோவா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கான காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்புகளில் இருந்து திக் விஜய் சிங் இன்று நீக்கப்பட்டுள்ளார். கோவா மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளராக செல்லக்குமார், மாநில செயலாளராக அமித் தேஷ்முக் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்திற்கான பொதுச்செயலாளராக கே.சி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக, மாணிக்கம் தாகூர், பி.சி.விஷ்ணுநாத், மது யாஷ்கி கவுட், டாக்டர் சேக் செயில்ஜனாத் ஆகிய 4 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: