புதன், 28 டிசம்பர், 2016

ஜெயலலிதாவை சசி கோஷ்டி கொன்றுவிட்டதாக கராட்டி ஹுசேன் ....

Natarajan vs Husseini continues warசென்னை: சசிகலா கணவருடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர் ஹுசைனிக்கு முள்ளி வாய்க்கால் முற்றம் தஞ்சையில் அமைத்த போது நடராஜனுடன் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போதே நடராஜனுடன் மல்லுகட்டிய கராத்தே மாஸ்டர் ஹுசைனி இப்போது ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா குடும்பத்தின் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 5ம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் அடுத்த பொதுச் செயலாளர் சசிகலாதான் என்று மூத்த நிர்வாகிகள் அறிவித்த நிலையில், சசிகலாவிற்கு எதிர்ப்பும் மறுபக்கம் வலுத்து வருகிறது. எனினும் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக் குழுவில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தேடுக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஜெயலலிதா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் அதற்கு நடராஜனின் பங்கு இருக்கிறது என்றும் பகிரங்கமாக ஹுசைனி குற்றம்சாட்டியுள்ளார்.


தஞ்சை மாவட்டம் விளார் என்ற இடத்தில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக உயிர் நீத்தவர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டது. அதற்காக சிலை அமைக்கும் பணியை நடராஜன் ஹுசைனியிடம் கொடுத்ததாகவும் ஆனால் அதற்கான சம்பளப் பணத்தை நடராஜன் கொடுக்க வில்லை என்றும் ஹுசைனி குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், நடராஜன் தன்னை வீட்டிற்கு அழைத்து கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும், ஹுசைனி கூறியிருந்தார். இதுதொடர்பாக அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்து ஹுசைனிக்கும் நடராஜனுக்கும் பெரிய யுத்தமே நடந்தது அப்போது. இதனையடுத்து, முள்ளிவாய்க்கல் அமைப்பதற்கான குழுவில் இருந்தவர்களும் ஹுசைனியும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொள்ளாத குறையாக பேசிக் கொண்டார்கள்.
இந்நிலையில், ஜெயலலிதாவை திட்டமிட்டு கொலை செய்து விட்டதாகவும், இதற்கு சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் இன்று செய்தியாளர்களிடம் ஹுசைனி பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதா நம்பிக்கையோடு ஓ.பன்னீர்செல்வத்திடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைத்தார். அதனை தயவு செய்து மன்னார்குடி கும்பலிடம் இழந்து விட வேண்டாம் என்றும் ஹுசைனிக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முள்ளி வாய்க்கலில் தோன்றிய பிரச்சனையின் தொடர்ச்சியாக இந்தக் குற்றச்சாட்டை ஹுசைனி வைப்பதாகவும், அதுவும் நாளை அதிமுக பொதுக் குழு கூட உள்ள நிலையில் இது போன்ற பீதியை கிளப்பி குளிர்காய்வதாகவும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர் tamiloneindia

கருத்துகள் இல்லை: