சென்னை, வானகரத்தில், வரும், 29ல் நடைபெறவுள்ள, அ.தி.மு.க., பொதுக்குழு மற்றும் செயற்குழுவில், சசிகலாவை பொதுச்செயலராக தேர்ந்தெடுக்க, அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், தீர்மானம் நிறைவேற்ற தயாராகி வருகின்றனர்.
எதிர்ப்புக்கொடி துாக்குவோரை, மிரட்டியும், பணம் கொடுத்தும் பணியவைக்கும் வேலைகளும் ஜரூராக நடந்து வருகின்றன.
அதேநேரத்தில், சசிகலா பொதுச்செயலர் ஆகிவிட்டால், கட்சியையும், ஆட்சியையும் ஆட்டுவிக்கும், ‘பவர் சென்டராக யார் இருப்பது’ என்ற யுத்தம், மன்னார்குடி சொந்தங்கள் மத்தியில் துவங்கி உள்ளது.
சசிகலா தம்பியான, மன்னார்குடி திவாகரனுக்கும், அவரது அக்கா வனிதாமணியின் மகனான,டி.டி.வி.தினகரனுக்கும் இடையே, வெளிப்படை யாகவே, இந்த விஷயத்தில் மோதல் வெடித் துள்ளது.
தினகரனுடன், அவரது மைத்துனரான டாக்டர் வெங்கடேஷும் கைகோர்த்திருப்பதால், மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 22 தேதி இரவு சசி முன்னிலையில் ஒரு பெரும் அடிதடி கலாட்டா நடந்ததாம்.
பெரும் மோதலாக மாறி இரண்டுபேருக்கு தலை, நெற்றியில் காயம் என்கிறார்கள். தடுக்கப் பாய்ந்த சசிக்கும் கழுத்தில் அடி பட்டு சாய்ந்தாராம். சிசகலா மயங்கியதால் உறவுகளே பயந்ழ போனது.அதன் பின்னரே அமைதியாக திரும்பினார்களாம்.
ஜெ., மறைந்த அன்றே, கட்சியினரையும், அதி காரத்தில் உள்ளோரையும், மன்னார்குடி சொந் தங்கள் மிரட்டத் துவங்கியதால், ‘திவாகரனை கொஞ்ச நாட்கள் ஊரில் போய் இரு’ என, சசிகலா சொல்லியுள்ளார். ஆனால், கட்சி நிர்வாகிகள், சசிகலாவை சந்திக்க வந்த போது,அங்கே டாக்டர் வெங்கடேஷ் வந்து நின்றார். அடுத்த சில நாட்களில், டி.டி.வி.தினகரனும் கார்டனுக்குள் நுழைந்து, சசிகலா அருகே நின்று, ‘போஸ்’ கொடுக்கத் துவங்கினார்.
அதுமட்டுமின்றி, முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ‘எதுவாக இருந்தாலும், என் னிடம் பேசுங்கள்’ என்றும், தினகரன் கூறியுள்ளார். இந்த விஷயம், திவாகரன் காதுக்கு எட்டியதும், அவர் மன்னார்குடியில் இருந்தபடியே, தினகரனும், வெங்கடேஷும் சேர்ந்து நடத்தும் அதிகார அடாவடிகளை, சசிகலாவுக்கு கடிதமாக எழுதியுள்ளார்.
இந்தச் சூழலில், டிச., 24ல், திடீரென, போயஸ் கார்டனுக்கு வந்த திவாகரன், சசிகலாவிடம், ‘உங்களைப் பார்க்க வரும் எல்லாரிடமும், தினகரன் தன், ‘விசிட்டிங் கார்டை’ கொடுத்து, தன்னிடம் பேசும்படி சொல்லி அனுப்புகிறார். வெங்கடேஷும், அதிகாரிகளை அழைத்து, எதுவாக இருந்தாலும், தினகரனிடம் பேசுங்கள் என்கிறார். ‘என்னைப் பற்றியும், என் மகன் ஜெய் ஆனந்த் பற்றியும், மீடியாக்களுக்கு போட்டுக் கொடுப்ப தும் இவர்கள் தான்’ என, ஆவேசமாக கூறியுள்ளார். திவாகரன், மன்னார்குடியில் இருந்த போது, தினமும் கார்டனுக்கு வந்து சென்ற, தினகரனும், வெங்கடேஷும், அவர் போயஸ் கார்டன் வந்திருக்கும் தகவல் அறிந்ததும், அங்கு வரவில்லை. அவர்கள் வந்திருந்தால், ஒரு குட்டி கலாட்டாவே நடத்திருக்கும் என்கின்றனர், போயஸ் கார்டன் ஊழியர்கள்.
இந்த நிலையில், அ.தி.மு.க.,வின் பவர் சென்டராக யார் இருப்பது என்பதில், மன்னார் குடி சொந்தங்கள் இடையே, யுத்தம் துவங்கியிருப்பது, பல்வேறு தரப்பினரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. ‘இவர்களிடம் கட்சியை ஒப்படைத்தால், நிலைமை என்னவாகும்’ என, தொண்டர்களும், யுத்தத்தில் இறங்கியிருப்பவர்களால் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் அதிகாரிகளும் புலம்புகின் றனர். அந்த பயத்தின் காரணமாக, அடிதடி போட்டுக் கொண்டிருக்கும் சொந்தங்களை, ‘அய்யா… பொறுங்கய்யா… என் பிழைப்பில் மண்ணை போட்டு விடாதீர்கள்’ என, கெஞ்சிக் கொண்டி ருப்பதாகத் தெரிகிறது.
‘சசிகலா பதவிக்கு வரும் முன்னரே, இந்த ஆட்டம் போடும் இவர்கள், அவர் பொதுச்செயலர் மற்றும் முதல்வராகி விட்டால், தமிழகத்தையே கூறுபோட்டு விற்று விடுவர்’ என்கின்றனர், அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள். அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், எதிர்ப்பு இன்றி, சசிகலாவை பொது செயலராக தேர்வு செய்ய, அவரது குடும்பத்தினர், தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். எதிர்ப்புகளை சமாளிக்க, 10 பேருக்கு, துணை பொதுச் செயலர் பதவிகளை உருவாக்க சசிகலா முடிவு செய்துள்ளார்.
சசிகலா பொதுச் செயலராக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அதனால், பொதுக்குழு கூட்டத் திற்கு, அவர் வரமாட்டார். ‘சசிகலா பொதுச் செயலராக வேண்டும்’ என, தீர்மானம் நிறை வேற்றி, அவரிடம் வழங்குவது என, ஆலோசிக் கப்பட்டுள்ளது. 10 துணை பொதுச்செயலர் பதவிகளை உருவாக்கி, செல்வாக்குள்ள முக்கிய ஜாதியினருக்கு தரப் பட உள்ளது. இதனால், எதிர்ப்பு குறையும் என, சசிகலா கருதுகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கவுண்டர் சமூகத்திற்கு, கொங்கு மண்டல அமைச்சர்களில் ஒருவர்; வன்னியர் சமூகத்திற்கு, செம்மலை அல்லது சி.வி. சண்முகம்; நாடார் சமூகத்திற்கு, அமைச்சர் பாண்டியராஜன் அல்லது முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் நியமிக்கப்படுவர் பிராமணர் சமூகத்தில், மைத்ரேயன் எம்.பி., அல்லது நடராஜன் எம்.எல்.ஏ., அல்லது தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் செயலர், அஸ்பயர் சாமிநாதனர் ஆகியோரில், ஒருவருக்கு பதவி நாயுடு, முதலியார், யாதவர், ஆதிதிராவிடர் என, சமுதாயத்திற்கு ஒரு துணைச் செயலர் என, 10 துணைச் செயலர்கள் நியமிக்கப்படுவர். இறுதி முடிவு, ஓரிரு நாளில் தெரிய வரும். லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக