புதுடில்லி: டில்லி எம்ய்ஸ் மருத்துவமனையில், எம்.டி., படிப்பு படித்து வந்த திருப்பூர் மாணவர் மர்ம மரணத்தை டில்லி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர், டாக்டர் சரவணன், 26; மதுரையில், எம்.பி.பி.எஸ்., முடித்த இவருக்கு, எம்.டி., பொது மருத்துவ படிப்பில், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இடம் கிடைத்தது.
கடந்த ஜூலை 1ம் தேதி, படிப்பில் சேர்ந்தார். 9ம் தேதி இரவு, மர்மமான முறையில், தன் அறையில் இறந்து கிடந்தார். அவரது அறை திறந்து கிடந்தது; கையில், 'டிரிப்ஸ்' ஏற்றியதற்கான அடையாளமும் இருந்தது.
பொதுவாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், எம்.டி., இடம் கிடைப்பது மிகக்கடினம். தகுதி அடிப்படையில் இடம் பெற்ற அவரது, மர்ம மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
சரவணனின் தந்தை கணேசன், திருப்பூர் கலெக்டரை சில மாதங்களுக்கு முன் சந்தித்து, தன் மகன் மரணம் குறித்த விசாரணைக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என, மனு கொடுத்தார். தமிழர்களுக்கு வட மாநிலங்களில் எப்போதுமே வஞ்சகமே என்பதற்கு கொலையுண்ட
மாணவர் சரவணனின் மரணமே சாட்சியாகும். வட மாநிலத்தவர்கள் தமிழர்களை என்றுமே
அலட்சிய பார்வையில் பார்ப்பவர்களே, அதிலும் எய்ம்ஸ் போன்ற இடங்களில்
மருத்துவ உயர் கல்வி பெறுவதற்கு விட்டு விடுவார்களா, மனம் துணிந்து எதையும்
செய்வார்கள் வட மாநில காசுக்கார அரசியல்வாதிகள். கொலை வழக்காக பதிவு
செய்தாலும் தீர்ப்புகள் வந்து விடும் என மட்டும் நாம் எதிர் பார்க்க
வேண்டாம் , காசு பாதாளம் வரைக்கும் பாயும் என்பார்கள் அதில் நீதிவான்கள்
மட்டும் விலக்கா ? .
அப்போது அவர் கூறியதாவது: என் மகன் எல்.கே.ஜி., முதல், எம்.பி.பி.எஸ்., வரை எப்போதும், 'டாப்' தான். முதல் தேர்விலேயே, எய்ம்ஸ் மருத்துவமனையில், எம்.டி., படிப்பு கிடைத்தது; அந்த அளவிற்கு திறமைசாலி. அவன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. டில்லி போலீசார், வழக்கை முடிப்பதில் தான் ஆர்வம் காட்டினரே தவிர, உரிய விசாரணை நடத்த முன்வரவில்லை. எனவே, மகனின் உடலை வாங்கி வந்து விட்டோம். நடந்தது திட்டமிட்ட கொலை தான். டில்லி வரை போராடும் சக்தி எங்களுக்கு இல்லை. விசாரணைக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என, திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், மாணவர் சரவணன் மரணத்தை, கொலை வழக்காக டில்லி போலீசார் பதிவு செய்துள்ளனர் தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக