செவ்வாய், 27 டிசம்பர், 2016

சசிகலா தலைமறைவுக்கு தயார் ? அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை !

  12 ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், ஹன்ஸ்ராஜ் வா்மா, அதுல்ஆனந்த், குமரகுருபரன், சபீதா, உதயச்சந்திரன், சந்திரகாந்த் பி. காம்ளே, சி.வி. சங்கா், சவுண்டையா, வெங்கடேசன், கார்ததிக்  ஆகியோர் கம்பி எண்ணக்கூடிய சாத்தியம்?
2012ம் ஆண்டு ஜெயலலிதா சசிகலாவை போயஸ் கார்டனில் அனுமதித்த பின்புதான் அவருக்கு தொல்லைகள் அதிகமானது. சசிகலாவே முதல்வராக செயல்பட்டார்.உளவுத்துறை போலீசார் முதல் தலைமை செயலாளா் வரை சசிகலாவிடம் தான் முடிவுகளை கூறிவந்தனா். அவா் கூறுவதை செய்தும் வந்தனா். பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் அப்படியே செய்து வந்தனா். இந்த உண்மையை தெரிந்து கொண்ட மத்திய அரசு சாட்டையை கையில் எடுத்தது. அதன் மூலம் தான் அதிமுகவின் ஒட்டு மொத்த பினாமி சேகா் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவரை தொடா்ந்து தலைமை செயலாளா் ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன்கள் மற்றும் தொழில் கூட்டு வைத்திருந்த நபா்கள் மாட்டினா்.
மாட்டியவா்களின் ரகசிய டைரி சிக்கியதால் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், ஹன்ஸ்ராஜ் வா்மா, அதுல்ஆனந்த், குமரகுருபரன், சபீதா, உதயச்சந்திரன், சந்திரகாந்த் பி. காம்ளே, சி.வி. சங்கா், சவுண்டையா, வெங்கடேசன், கார்ததிக் ஆகியோர் மாட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவா்களிடம் விசாரணை நடக்கும் பட்சத்தில் அதிமுக பொதுச் செயலாளா் கனவு காணும் சசிகலாவும் மாட்டுவார். அவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டிய நிலை வரும். இதனை தடுக்க என்ன வழி ? நான் என்ன செய்ய வேண்டும் என்று முழிபிதுங்கிய நிலையில் உள்ளார். 34 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்து இதுவரை 45 நிறுவனங்கள் பினாமி மூலம் தொடங்கி 5000 கோடி வரை வைத்துள்ள சசிகலாவுக்கு பணம் எப்படி வந்தது என்று கணக்கு காட்ட முடியாத நிலை ஏற்படும். இதற்காக அவா் அதிமுகவை விட்டு ஓடுகிறேன் என்று கூறினாலும் வழக்கு பாயும். தப்பிக்க என்ன வழி என்று சின்னம்மா, சித்தப்பாவுடன் ஆலோசித்து வருகிறார். வருமான வரித்துறை போயஸ் கார்டன் வீட்டிற்குள் நுழைந்து விட்டது. இனி சசிகலாவைதான் தொட வேண்டும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை. சில தினங்களில் இது நடக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சசிகலா தலைமறைவாகலாம் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு அனைத்து ஏா்போர்ட்டுகளிலும் ரகசியமாக அலர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாம். மத்திய உளவுத்துறை ரகசியமாக கண்காணிக்கவும் செய்கிறது என்றும் கூறப்படுகிறது. laivde

கருத்துகள் இல்லை: