மின்னம்பலம் .காம் :“யாரும் எதிர்பார்க்காதவிதமாக இன்று செய்தியாளர்களை
சந்தித்திருக்கிறார் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ். அப்போது
சொன்னவற்றையெல்லாம் நாம் மின்னம்பலத்தில் மதியம் பதிவிட்டிருக்கிறோம்.
‘மாநில அரசின் அனுமதியில்லாமல் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை எப்படி,
ஒரு மாநில அரசின் அலுவலகத்துக்குள் நுழையலாம்... முதல்வர் ஜெயலலிதா
இருந்திருந்தால் இது நடந்திருக்குமா... அவரை, இப்படியாக எதிர்க்கும் துணிவு
இவர்களுக்கு இருந்திருக்குமா?’ என்று, அவர் கொந்தளித்திருக்கிறார்.
ராமமோகன் ராவ், மத்திய அரசுமீது நேரடியாக குற்றச்சாட்டுகளை
முன்வைத்திருக்கிறார். மத்திய அரசு திட்டமிட்டு மாநில அரசைப் பழி
வாங்குகிறது என்று அவர் சொல்லியிருக்கிறார். மன்னார்குடி குடும்பத்தைச்
சேர்ந்த ஒருவரது வீடு அண்ணாநகரில் இருக்கிறது. நேற்று அதாவது, 26ஆம் தேதி
இரவு அந்த மன்னார்குடிப் பிரமுகர், கோயம்பேடு அருகேயுள்ள ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகளுக்கான குடியிருப்புப் பகுதிக்கு போயிருக்கிறார். மரங்கள்
சூழ்ந்து, அந்தப் பகுதி இருட்டாகத்தான் இருக்கும். அப்படி ஒரு இருண்ட
பகுதியில், அந்த மன்னார்குடிப் பிரமுகரின் கார் நிறுத்தப்பட்டிருந்ததாம்.
சற்றுநேரத்துக்குப் பிறகு, அந்த காருக்குப் பக்கத்தில் இன்னொரு கார் வந்து
நின்றிருக்கிறது. அந்தக் காரிலிருந்து இறங்கிய ஒருவர், மன்னார்குடிக்காரர்
காரில் ஏறியிருக்கிறார். மன்னார்குடிக்காரர் கார் டிரைவர் உள்ளேயிருந்து
இறங்கி வெளியே வந்துவிட்டாராம். மன்னார்குடிக்காரர் காருக்கு மாறியவர்
ராமமோகன் ராவுக்கு நெருக்கமானவர் என்கிறார்கள்.
பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பேசச் சொல்லுங்கள் என்பது தொடங்கி, என்ன பேச வேண்டும் என்பது வரை டிப்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘பிரஸ் மீட் வைத்தால் பல கேள்விகள் வரும். எதையும் காதில் வாங்கிக்கொள்ள வேண்டாம். சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லச் சொல்லுங்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார். இதனால் எதுவும் சிக்கல் வராதா என்றும் கேட்டிருக்கிறார் ராமமோகன் ராவுக்கு நெருக்கமானவர். ‘எது வந்தாலும் நாங்க பாத்துக்குறோம். சொல்லச் சொன்னாங்க!’ என்று சொன்னதாக, மன்னார்குடி வட்டாரத்திலிருந்து தகவல் வருகிறது. இன்று காலை ராமமோகன் ராவ் செய்தியாளர்களை சந்திக்கப் போகிறார் என்ற தகவல் நேற்று மாலையிலிருந்தே மன்னார்குடி வட்டாரத்தில் பேசப்பட்டும் இருக்கிறது. ஆக, இன்று கார்டன் அனுமதியோடு, அவர்கள் வழிகாட்டுதல்படிதான் ராமமோகன் ராவ் பேசியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.” என்பதுதான் அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து, தனது பக்கத்தில் போஸ்ட் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து அடுத்த ஸ்டேட்டஸை தயார் செய்தது.
“தமிழக அரசை மிரட்டிப் பார்க்க, மத்திய அரசு கையில் எடுத்த ஆயுதம்தான் ராமமோகன் ராவ். ராமமோகன் ராவ் வீடு மட்டுமல்லாமல், தமிழக அரசின் தலைமைச் செயலகம் வரை ரெய்டு போனார்கள். அதை அடிப்படையாக வைத்து, அடுத்த கட்டமாக போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்த திட்டம் வைத்திருந்தார்கள். அப்படி ரெய்டு போயிருந்தால் அது, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கும் விஷயமாக மாறியிருக்கும். இந்தத் தகவல் முதலில் பன்னீர் செல்வம் கவனத்துக்குத்தான் வந்திருக்கிறது. அவரும் கார்டன் வட்டாரத்தில் பேசியிருக்கிறார். கார்டனுக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு பிரமுகரை வைத்து அமித் ஷாவுடன் பேசியிருக்கிறார்கள். அப்போது, சில டீல் பேசப்பட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால் என்ன பேசினார்கள் என்ற தகவல் முழுமையாக வெளிவரவில்லை. அமித் ஷா சொன்ன விஷயங்களுக்கு அதிமுக ஓ.கே. சொன்னதாகவும் அதே நேரத்தில், அதிமுக தரப்பிலிருந்தும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பிஜேபி-யும் சம்மதம் சொல்லியிருக்கிறது. அதன்பிறகுதான் பரபரப்பாக செயல்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அப்படியே அமைதியானார்கள். போயஸ் கார்டனுக்கும், சிறுதாவூருக்கும் போகயிருந்த வருமான வரித்துறையினர்மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக