தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவ் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை செய்ததையடுத்து குமரி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள கேரளப் பகுதி மணல், கல்குவாரி மாஃபியாக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர்.;கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் தூர்வாரி வண்டல்மண் மற்றும் மணல் அள்ளும் உரிமையைப் பெற்று இருப்பவர், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான கே.ஆர்.வீ.செல்வம். ஆறு மாதத்துக்கு முன்னர் செண்பகராமன் புதூர் பெரியகுளத்தில் மண் அள்ளும்போது பொதுமக்கள் பிரச்சினை செய்ததால், அவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. மா.செ.வும் எம்.பி.யுமான விஜயகுமார் மண் அள்ளியதைத் தடுக்கமுயன்றார். உடனே ராமமோகனராவின் கவனத்துக்கு இது கொண்டுபோகப்பட்டதால் எம்.பி.யும் ஒத்திசைந்தார். அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மண் அள்ளினார்கள்.
;மாவட்டத்தில் உள்ள மலைகளைப் பாதுகாப்பதற்காக, முந்தைய கலெக்டர் நாகராஜன் மூடி சீல்வைத்த குவாரிகளின் உரிமையாளர்கள், ரா.மோ.விடம் தங்கள் பிரச்சினையைக் கொட்டினர். அதையடுத்து நாகராஜனைத் தூக்கியடித்துவிட்டு, புதிய ஆட்சியராக சஜ்ஜன்சிங்சவான் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற முதல் நாளே, சீல் வைக்கப்பட்ட அத்தனை கல்குவாரிகளையும் திறக்க உத்தரவிட்டார். அந்த அளவுக்கு ராமமோகனராவ் குவாரிகள் மீது ஆர்வமாக இருந்தார்.
தென்கோடியில் இப்படி என்றால், வடகோடியான திருவள்ளூரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ரமணா மற்றும் அவரின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பும் உண்டு.
இவர்தான் ரமணாவின் அரசியல் வளர்ச்சிப்பாதையில் முக்கிய திருப்புமுனை. முதல் முறை எம்.எல்.ஏ. சீட் வாங்கி, அமைச்சரானதற்கு காரணம் ராமமோகனராவ் ஆசிதான். ரமணாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்க உதவியதும் ராமமோகனராவ்தான் என்கின்றனர், ரமணாவின் ஆதரவாளர்கள். இதனால் ராமமோகனராவின் பக்தனாகவே மாறிப்போனார் ரமணா.
;ராமமோகனராவ் வீட்டில் எந்த விழாவாக இருந்தாலும், ரமணாவும் அவரின் துணைவி லலிதாவும் ஆஜராகிவிடுவார்கள். அதேபோல ரமணா வீட்டு நிகழ்ச்சிகளிலும் ரா.மோ.ரா. தவறாமல் கலந்துகொள்வார். இரண்டு குடும்பங்களுக்குள்ளும் நட்பு பலப்பட்டது. ரா.மோ.ரா.வுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல சொத்துக்களை வாங்கிக் கொடுத்துள்ளார் என்பது ரமணாவின் எதிரணியினர் வைக்கும் குற்றச்சாட்டு.
கடந்த 25-02-16 தேதியிட்ட நக்கீரன் இதழில் ராமமோகனராவுக்கும் ரமணாவுக்கும் உள்ள நெருக்கம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
;திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் செயற்பொறியாளர் அசோகன், ராவுக்கு மிகவும் நெருக்கம்.
இதேபோல ஆவடி ஜேக் ஜெயராமன் பிறந்தநாள் ஏப்ரல் 10ஆம் தேதி கோலாகல மாகக் கொண்டாடப்படும். அதில் முக்கியமாகக் கலந்துகொள்ளும் ஆட்களில் ரா.மோ.ராவும் ஒரு வர். ஜெயராமனின் தொழில் வளர்ச்சியிலும் ரா.மோ. ராவுக்கு கணிசமான பங்கு உண்டு. இப்படி இன்னும் பல ரா.மோ.ராவின் சேர்க் கைகளும் கண்காணிப்பில் உள்ளனர்.
-மணிகண்டன்,
தேவேந்திரன் நக்கீரன்
சசிகலாவை
சந்திக்காத அ.தி.மு.க பிரபலங்களில் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன்
முக்கியமானவர். தமிழ்நாட்டின் பல இடங்களிலும் தீபா பேரவையை
அ.தி.மு.க.வினர் உருவாக்கி வரும் நிலையில், சட்டரீதியான ஆலோ சனையைத் தீபா
தரப்புக்கு வழங்கி வருகிறாராம் பி.ஹெச்.பாண்டியன்,
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக