செவ்வாய், 27 டிசம்பர், 2016

ராம் மோகன ராவுக்கு ஒண்ணுமே தெரியாதாம் ..ரெட்டிதான் குற்றவாளியாம்? RMR முதல்ல வரட்டும் அப்புறம் ரெட்டியை அவன் காப்பாத்துவான்

OPS மற்றும் சசி ஏதாவது பிரச்சினை செய்து, GST மற்றும் மத்திய அரசின் திட்டங்களோடு முரண்பட்டால் அப்போது தூசி தட்டப்படும், ஆகமொத்தத்தில் வெறும் மிரட்டலுக்கு தானென்கிறார்கள், விவரமறிந்த வட்டாரங்கள்,
தமிழக தலைமை செயலராக இருந்த, ராமமோகன ராவ், அவரது மகன் விவேக் ஆகியோர் வீடு, அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், 21ம் தேதி, அதிரடி சோதனை நடத்தினர். அதில், விவேக்கின் வீட்டில் இருந்து, பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மூலம், மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டியுடன் உள்ள, தொழில் தொடர்புகள் தெரிய வந்தன. விவேக்கின் நிறுவனங்களில், சேகர் ரெட்டியின் பணம் சிக்கியது.< தகவல் பரவியது< />இதற்கிடையில், நெஞ்சு வலி காரணமாக, சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், ராமமோகன ராவ் சிகிச்சை பிரிவில் இருந்து, அவர் நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரிடம்,< வருமான வரித்துறை விசாரணை நடைபெறுமா என, எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், அவரிடம்அனுமதிக்கப்பட்டார். அவர், வருமான வரி விசாரணையில் இருந்து தப்புவதற்காக, அப்படி நாடகம் ஆடுவதாக, தகவல் பரவியது.இந்நிலையில், இதய நோய் அவசர விசாரணை நடத்துவதற்கான தேவை இல்லை என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  


இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:

நாங்கள் எதிர்பார்த்தது போன்றே, முக்கிய ஆவணங்கள், விவேக்கின் வீட்டில் சிக்கின. ஆனால், நாங்கள் சோதனை நடத்துவோம் என்பதை கணித்தோ என்னவோ, ராவின் வீட்டில், பெரிதாக எதுவும் சிக்கவில்லை. எனவே, அவரிடம், தேவைப்பட்டால் அழைப்போம் என, கூறியிருந்தோம்.
அவரிடம், மேலும் விசாரணை நடத்துவதற்கு, இப்போதைக்கு அவசியம் இல்லை. அதனால், மருத்துவமனைக்குச் சென்று விசாரிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.
இவ்வாறு அவர்கள்கூறினர்.

எல்லாமே என்னுடையது தான்!

சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய, 177 கிலோ தங்கக் கட்டிகளில் கணிசமானவை, ராமமோகன ராவுக்கு சொந்தமாக இருக்கலாம் என, வருமான வரித்துறை கருதியது. அதுபற்றி, சேகர் ரெட்டியிம் விசாரித்த போது, 177 கிலோ தங்கக் கட்டிகளும், 132 கோடி ரூபாயும் தன்னுடையது தான் என, ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.ராவ் வீட்டில் சிக்கிய ஆவணங்களும், போதுமான ஆதாரமாக இல்லை. அதனால், விவேக்கிடம் பறிமுதல் செய்த ஆவணங்களில், வில்லங்கம் இல்லாத நிலையில், ராவ், வருமான வரித்துறை வலையில் இருந்து, எளிதில் தப்பக்கூடும்.
எனினும், விவேக்கின் வீட்டில் சிக்கியுள்ள ஆவணங்கள், சம்பந்தி பத்ரி நாராயணன் வீட்டில் சிக்கிய, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில், சி.பி.ஐ., எடுக்கும் நடவடிக்கை, ராவுக்கு தலைவலியை தரலாம்.
- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: