டெல்லியில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக்
கூட்டத்தில் டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பிறகு செல்லாத நோட்டுகளாக
அறிவிக்கப்பட்ட 500,1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அவர்களுக்கு
அபராதம் விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது.
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து இன்றோடு 50 நாட்கள் ஆகி விட்ட நிலையில் மக்களின் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இனியும் இந்த பிரச்னை தொடர்வது மத்திய அரசுக்கு தலைவலியாக மாறலாம் என்பதால் இன்று சில முடிவுகள் எடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பின்னர் சுமார் 68 கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இந்தக் கட்டுப்பாடுகளை கொஞ்சமும் தளர்த்த வில்லை. இதனால் வங்கிகளுக்கும், மக்களுக்கும் ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக சில முடிவுகள் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் பழைய நோட்டுகளை டிச-31 -ஆம் தேதிக்குப் பிறகு வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக