Demonetization has affected farmers in Phuentsholing, a town bordering India, and they are struggling to sell potato and cardamom stocks to Indian traders who are finding it difficult to make cash payments. After demonetization, cardamom prices fell from 900 Ngultrums a kg to 700 Ngultrums (one Ngultrum is equivalent to an Indian rupee). The unofficial exchange value of Rs 100 has now become about 130 Ngulturms in the black market. There have been reports of border villages in Assam now using Bhutanese currency so that trade does not come to a standstill. They fervently hope that in the next few months, they will be able to cash the Ngultrums in return for Indian currency.
மின்னம்பலம் : இந்தியாவுக்கான ஆரஞ்சு ஏற்றுமதியில் மிகப்பெரிய இடத்தை வகிக்கும் பூட்டான் நாட்டிலும் பண மதிப்பிழப்பு அறிவிப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டான் நாட்டில் இந்த ஆண்டுக்கான ஏலக்காய் உற்பத்தி பொய்த்துப்போனது. ஆனால் ஆரஞ்சு உற்பத்தி பெருமளவு அதிகரித்திருந்தது. ஆரஞ்சு உற்பத்தி, கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு ஆரஞ்சு ஏற்றுமதி செய்வதில் பூட்டான் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. தற்போது பண மதிப்பிழப்பு அறிவிப்பால், பூட்டானின் ஆரஞ்சு ஏற்றுமதியில் மிகப்பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது, பூட்டானின் ஆரஞ்சு ஏற்றுமதியாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆரஞ்சுகளை பெட்டிகளில் வைத்து ஏற்றுமதி செய்வதற்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பூட்டானின் கரன்சியான Ngultrum பயன்படுத்தினால் அதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
பூட்டானின் பரோ பகுதியைச் சேர்ந்த ஆரஞ்சு ஏற்றுமதியாளர்கள், கடந்த பத்து வருடங்களாக இந்தியாவுக்கு ஆரஞ்சு ஏற்றுமதி செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டுகளைவிட, இந்த ஆண்டு அதிகமான, தரமான ஆரஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை ஏற்றுமதி செய்ய முடியாமல் ஏற்றுமதியாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
‘நாங்கள் ஆரஞ்சுகளை ஏற்றுமதி செய்வதற்கு மறைமுக, அதிகாரபூர்வமற்ற வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. அதிகமான உற்பத்தியை ஈட்டியும் அதை, முழுமனதாகக் கொண்டாட முடியாத நிலையில் உள்ளோம்’ என்று ஏற்றுமதியாளர் ஒருவர் கூறினார்.
பூட்டானின் ‘Gelephu ஆரஞ்சு டிப்போவிலிருந்து பங்களாதேஷ் எல்லை வரை ஆரஞ்சுகளைக் கொண்டுசெல்வதற்கு ஏற்றுமதியாளர்களிடமிருந்து டிரக் ஒன்றுக்கு 19,000 Nu வரை வசூலிக்கப்படும். ஆனால் தற்போது 20,000 Nu வரை வசூலிக்கப்படுகிறது.
பூட்டானின் ஆரஞ்சு ஏற்றுமதி, நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறும். ஆனால் கடந்த நவம்பர் 8ஆம் தேதி வெளியான பண மதிப்பிழப்பு அறிவிப்பால் எதிர்பாராதவகையில் ஆரஞ்சு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு குறித்து பூடானின் அதிகாரிகள் பேசுகையில், ‘பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாள் (BBIN) ஆகிய நாடுகளுக்கிடையேயான மோட்டார் வாகன ஒப்பந்தம் (MVA) அமல்படுத்தப்பட்டிருந்தால், பூட்டான் டிரக்குகள் பங்களாதேஷுக்காக அனைத்து வழிகளிலும் பயணப்பட்டிருக்கும். ஆரஞ்சு ஏற்றுமதியாளர்களுக்கு அதிகக் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை வந்திருக்காது’ என்று கூறினர்.
ஆரஞ்சு ஏற்றுமதியாளர்கள், இந்திய டிரக்குகளுக்கு செலுத்துவதற்கு மட்டுமல்லாமல், அவர்களது பணியாட்களுக்கு கூலி வழங்குவதற்கும் இந்திய கரன்சியை நம்பியே உள்ளனர். இது, இந்தியாவுக்கான ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் பூட்டானை பெரிதும் பாதித்துள்ளது.
இந்தியா, பூட்டானுக்கு எளிதில் அணுகக்கூடிய தனித்துவமான சந்தையாகத் திகழ்கிறது. ஆனால் இதுபோன்ற அவசர காலங்களில் ஏற்றுமதி பாதிப்பால் வேறு மாநிலங்களுக்கும் வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தியாவுக்கான மிக முக்கிய ஏற்றுமதிச் சந்தையான பூட்டானின் பாதிப்பு இந்திய வர்த்தகத்திலும் பின்னடைவை ஏற்படுத்தும்.
தொகுப்பு : தீபன்ஜன் ராய் சௌத்ரி
தமிழில்: பீட்டர் ரெமிஜியஸ்
நன்றி: எகனாமிக் டைம்ஸ்
பண மதிப்பிழப்பால் மலர் வியாபாரம் பாதிப்பு
பண மதிப்பிழப்பால் வெங்காயம் உற்பத்தி பாதிப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக