29 ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்காக அரசு அதிகாரிகள் பலர் பணியாற்றி கொண்டிருக்கின்றனர்.
சென்னை வானகரத்தில் 5 ஆயிரம் கிலோ
ஆட்டுக்கறி, 10 ஆயிரம் லெக் பீஸ் அசைவ மற்றும் சைவ உணவுகளுடன் ஆடம்பரமாக
அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடக்கும் பொதுக்குழு கூட்டம். யார் பொதுச் செயலாளர் என்பதற்காக நடக்கும் பொதுக்குழு கூட்டம்.
அதுவும் ஜெயலலிதா இறந்தது எப்படி என்று தெரியாமல் அதிமுக தொண்டா்கள் தவித்து வரும் நிலையில் நடக்கும் பொதுக்குழு கூட்டம்.
அ.தி.மு.க.வின் பொதுக்குழு வரும் 29ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான பணிகள் படு வேகமாக நடந்து
வருகின்றன. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது இந்த மண்டபத்தில் நடந்த
பொதுக்குழு கூட்டம் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
அப்போது பொதுக்குழுவிற்கு வந்த 5,000 மேற்பட்ட அ.தி.மு.க.வினருக்கு அசைவ, சைவ உணவுகள் வழங்கப்பட்டது.
அதுபோலவே தற்போதும் ஆடம்பரமாக பொதுக்குழுவை
நடத்த கார்டனிலிருந்து உத்தரவு வந்துள்ளது. அதன்பேரில் அமைச்சர், மாவட்டச்
செயலாளர் தலைமையில் கட்சியினர் திருமண மண்டபத்தில் பணிகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
அ.தி.மு.க பொதுக்குழு பணிக்காக திருவேற்காடு நகராட்சியிலிருந்து கமிஷனர், இன்ஜினீயர்கள், ஊழியர்கள் என அனைவரும் சென்றுள்ளனர்.
பணியில் 10க்கும் மேற்பட்ட நகராட்சி
வாகனங்கள் 5 ஜே.சி.பி இயந்திரங்கள், சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
மண்டபத்தை சுற்றி உள்ள சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
அதில் உள்ள வேகத்தடைகளும்
அகற்றப்பட்டுள்ளன. சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக
அ.தி.மு.க முக்கிய நிர்வாகி வீட்டிலிருந்து மண்டபம் வரை பிளிச்சிங் பவுடர்
போடப்பட்டு வருகிறதாம்.
போலீஸ் உயரதிகாரிகள் இன்று காலை
மண்டபத்திற்கு வந்தனர். மண்டபத்தின் எதிரில் உள்ள அடுக்குமாடி
குடியிருப்புகளில் உள்ள விவரங்களை அவர்கள் சேகரித்தனர். அப்போது
குடியிருப்பில் உள்ளவர்களின் வாகனங்கள் (கார்) தவிர வெளிநபர்களின் கார்களை
கூட்டம் நடக்கும் நாளில் அனுமதிக்கக் கூடாது என்று குடியிருப்புவாசிகளிடம்
தெரிவித்துள்ளனர்.
மேலும் மண்டபத்தின் அருகே தனியார் குடோன்
ஒன்று உள்ளது. அங்கு தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்லும்.
வரும் 29ம் தேதி லாரிகள் குடோனுக்கு வரக்கூடாது என்றும் போலீஸார்
வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். போலீஸாரின் கெடுபிடியால் பொது மக்கள்
எரிச்சல் அடைந்துள்ளனர்.
சசிகலாவுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கூறி
எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அமைச்சா்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு
உறுப்பினா்களுக்கு சசிகலா தரப்பில் பலகோடி செலவிடப்பட்டுள்ளது.
5 ஆயிரம் கிலோ ஆட்டு கறி, 10 ஆயிரம்
சிக்கன் லெக் பீஸ், வஞ்சர மீன் வறுவல் உள்ளிட்ட பலவாறு கூட்டத்தில்
கலந்துகொள்வோரை கவனிக்க உள்ளார்.
இதை எல்லாம் பார்க்கும் போது ஒரு அனுதாபம், மனசோகம் வேண்டாம் ஜெயலலிதா எப்ப சாவாங்க என்று காத்திருந்தது போலதான் உள்ளது.
பொதுக்குழுவில் எதிர்ப்பார்கள் என்று நம்பப்படும் உறுப்பனா்களுக்கு அழைப்பிதலே கொடுக்கப்படவில்லையாம்.
இனி அதிமுக அழிவது உறுதி ஆண்டவனாலும்
காப்பாற்ற முடியாத நிலையை நோக்கி சசிகலா நகா்த்தி வருகிறார் என்று அதிமுக
வட்டாரத்தில் பேசிவருகின்றனா். லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக