மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியை பார்க்க தமிழகம் முழுவதிலும்
இருந்து அதிமுக வினர் சென்னையை நோக்கி வருகின்றனர். அப்படி சென்னையை நோக்கி
வந்த கரூரைச் சேர்ந்த அதிமுக வினர் 12 பேர் இன்று காலை ஜெயலலிதா சமாதி,
மெரினா பீச் என சுற்றி பார்த்துவிட்டு இரு ஆட்டோ பிடித்து கோபாலபுரம்
வந்தனர். திமுக தலைவர் கலைஞர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு
ஓய்வெடுத்து வரும் நிலையில் அதிமுக கரை வேட்டியுடன் ஆண்களும் பெண்களும் 12
பேர் கலைஞர் இல்லத்திற்கு வந்து கலைஞரை
பார்க்க வேண்டும் என வாசலில் நின்றிருந்த போலிசாரிடம் தெரிவிக்க அவர்களே
மறுத்து அனுப்பி விட்டனர். அப்போது வீட்டின் முகப்பு அறையில் அமர்ந்திருந்த
திமுக பொருளாளர் ஸ்டாலின் அருகிலிருந்த சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்
அவர்களை அழைத்து அவர்களை உள்ளே வரச் சொல்லுங்கள் எனச் சொல்ல, அதிமுக கரை
வேட்டியுடன் அனைவரும் உள்ளே வந்தனர்.
அவர்களிடம் எளிமையாக பேசிய ஸ்டாலின், சென்னையில் எங்கெங்கு எல்லாம் போய் பார்த்தீங்க? எனவும் உங்கள் ஊர் என்ன? பெயர் என்ன?என்ன தொழில் பண்றீங்க என அவர்களிடம் 15 நிமிடம் பேசினார். பின்னர் போட்டா எடுத்துக்கலமா? எனக்கேட்ட அவர்களிடம் “இதென்ன கேள்வி? வாங்க” என அருகில் இருந்தவர்களை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் ஸ்டாலின்.
அப்போது ஸ்டாலினிடம் பேசிய அவர்கள், “எங்கம்மாவை கொன்னுட்டாங்க, நீங்க தான் கேசு போட்டு கொன்னவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கனும்” எனக் கூறியது அங்கிருப்பவர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அரசியல் நாகரீகம் என்பது வேறெங்கும் இல்லை, எதிரிக்கட்சியானாலும் இல்லத்திற்குள் அழைத்து நலம் விசாரிப்பதே!
மேன்மக்கள் மேன்மக்களே என்பதை நிரூபிக்கிறார் #தளபதி ஸ்டாலின்...!! முகநூல் பதிவு வி எம் ஷாஜஹான்
மேன்மக்கள் மேன்மக்களே என்பதை நிரூபிக்கிறார் #தளபதி ஸ்டாலின்...!! முகநூல் பதிவு வி எம் ஷாஜஹான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக