திங்கள், 26 டிசம்பர், 2016

திமுக பொதுக்குழு ஜனவரி 4 கலைஞர் தலைமையில் கூடுகிறது ..

அன்பழகன் தலையீடு
சென்னை: திமுக பொதுக்குழுவில் பொருளாளர் முக ஸ்டாலின், செயல் தலைவராகவும் ராஜ்யசபா எம்பி கனிமொழி, துணை பொதுச்செயலராகவும் தேர்வு செய்யப்படக் கூடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக பொதுக்குழு டிசம்பர் 20-ந் தேதி கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு ஜனவரி 4-ந் தேதி கூடுகிறது. திமுகவில் செயல் தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவியை எப்படியும் பெற்றுவிடுவதில் ஸ்டாலின் தரப்பு மும்முரமாக இருக்கிறது.


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை முன்வைத்து ஸ்டாலின் தரப்பு இதை வலியுறுத்தி வருகிறது. ஸ்டாலினை அப்படி செயல் தலைவராக்கினால் மறைந்த சற்குணபாண்டியன் வகித்த துணை பொதுச்செயலர் பதவியை கனிமொழிக்குதான் கொடுக்க வேண்டும் என ராஜாத்தி அம்மாள் தரப்பு நெருக்கடி கொடுக்கிறது.
தற்போது கோபாலபுரத்துடன் சமாதானமாகிக் கொண்டிருக்கும் அழகிரியும் இருவருக்கும் பதவி கொடுக்கும்போது தம்மை கட்சியில் சேர்த்து மீண்டும் தென்மண்டல அமைப்புச் செயலர் பதவியும் மகனுக்கு இளைஞர் அணியில் பதவியும் தர வலியுறுத்துகிறாராம்.

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட போதும் இந்த பதவி பஞ்சாயத்து நடந்துள்ளது. திமுக பொதுச்செயலர் அன்பழகன் இந்த பஞ்சாயத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என கருணாநிதியிடம் தற்போது வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஜனவரி 4-ந் தேதி கூடும் திமுக பொதுக் குழுவில் ஸ்டாலினை செயல் தலைவர் அல்லது துணைத் தலைவராகவும் கனிமொழியை துணை பொதுச்செயலராகவும் அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென்மண்டல அமைப்புச் செயலர் பதவி கொடுப்பது என்பதில் ஸ்டாலின் தரப்பு தீவிரமாக எதிர்க்கிறது. இதனால் திமுக பொதுக் குழுவில் அழகிரியை சேர்ப்பது தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்
சென்னை: திமுக பொதுக்குழுவில் பொருளாளர் முக ஸ்டாலின், செயல் தலைவராகவும் ராஜ்யசபா எம்பி கனிமொழி, துணை பொதுச்செயலராகவும் தேர்வு செய்யப்படக் கூடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக பொதுக்குழு டிசம்பர் 20-ந் தேதி கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு ஜனவரி 4-ந் தேதி கூடுகிறது.

திமுகவில் செயல் தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவியை எப்படியும் பெற்றுவிடுவதில் ஸ்டாலின் தரப்பு மும்முரமாக இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை முன்வைத்து ஸ்டாலின் தரப்பு இதை வலியுறுத்தி வருகிறது  tamiloneindia

கருத்துகள் இல்லை: