திங்கள், 10 அக்டோபர், 2016

சசிகலா நடராஜன் - அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவி ..தஞ்சையில் போட்டி?

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் நேரடி அரசியலில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் தொகுதியில் சசிகலா நடராஜன் போட்டியிடக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகாரால் தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இன்னமும் இத்தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொறுப்பு முதல்வர் அல்லது அரசாங்கத்தை வழிநடத்துபவர் யார்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் ஒருசிலர் சசிகலா நடராஜனே தலைமை வகிக்கட்டும் என குரல்கள் கொடுத்தும் வருகின்றனர். >தற்போது சசிகலா நடராஜன் நேரடி அரசியலுக்கு வருவதற்கான சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதிகள், அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட சக்திகள் ஆட்சி நடத்தக் கூடாது என்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
>மேலும் சசிகலாவை அதிமுக துணைப் பொதுச்செயலராகவும் அறிவித்து அவரை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சசிகலாவை தவிர்த்து வேறு ஒருவர் கைக்கு கட்சியும் ஆட்சியும் போவதை அவரது கணவர் நடராஜன் விரும்பவில்லையாம்... இதற்காகவே சசிகலாவை களத்தில் இறக்கி அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றுவது என தீர்மானித்துள்ளதாம் மன்னார்குடி தரப்பு.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: