வெள்ளி, 14 அக்டோபர், 2016

Kerala's RSS-CPM clashes claim 7 lives கேரளா RSS - CPM தொண்டரகள் பரஸ்பரம் மாறி மாறி கொலை... வேதங்களோட நாடு ...

திருவனந்தபுரம்: தொண்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, கேரளாவில், பா.ஜ., நேற்று நடத்திய கடையடைப்பு போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கேரளாவில், பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், கண்ணுார் மாவட்டத்தில், சில நாட்களுக்கு முன், மார்க்சிஸ்ட் தொண்டர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அதற்கு பழி வாங்கும் வகையில், பா.ஜ.,வைச் சேர்ந்த ரமீத், 29, என்பவர், நேற்று முன்தினம், படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்து, பா.ஜ., சார்பில், மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்த, அழைப்பு விடுக்கப்பட்டது.இதையடுத்து, மாநிலம் முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், பாலக்காடு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன; பல பகுதிகளில், பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.
குறிப்பாக, கண்ணுார் மாவட்டத்தில், போராட்டம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட ரமீத் உடலின், பிரேத பரிசோதனை, கண்ணுார் அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதையொட்டி, மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ரமீத்தின் இறுதி சடங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பா.ஜ., தொண்டர்கள் பங்கேற்றனர்.
10 பேர் மீது வழக்கு : இதற்கிடையில், ரமீது கொலை தொடர்பாக, மார்க்சிஸ்ட் தொண்டர்கள், 10 பேர் மீது, போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தக் கொலை பற்றி விசாரிக்க, தனி போலீஸ் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
பாரபட்ச நியமனத்தை தடுக்க சட்டம் : கேரளாவில், பொதுத்துறை நிறுவனங்களின் உயர் பதவிகளில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களின் வாரிசுகள், உறவினர்கள், எந்தவித தகுதியும் இன்றி, பாரபட்சமாக நியமிக்கப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில், மாநில அமைச்சரவை கூட்டம், நேற்று நடந்தது. இதில், பொதுத்துறை நிறுவனங்களின் முக்கிய பதவிகளில், பாரபட்ச நியமனத்தை தடுக்க, சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இது வரை நடந்துள்ள நியமனங்கள் குறித்து, தலைமைச் செயலர் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
முதல்வர் பினராயி விஜயனின் சொந்த தொகுதியிலேயே, பா.ஜ., தொண்டர் கொல்லப்பட்டுள்ளது, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை தான், என்பதில் சந்தேகமில்லை. கேரளாவில் பா.ஜ.,வின் வளர்ச்சியால், மார்க்சிஸ்ட் பீதியடைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தொண்டர்கள், தொடர்ந்து கொலை செய்யப்படுவது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அமித் ஷா, தேசிய தலைவர், பா.ஜ.,
கண்ணுாரில் நடக்கும் வன்முறைக்கு, ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., தான் முற்றிலும் காரணம். வன்முறையை துாண்டி, மக்களிடம் விரோதத்தை வளர்க்க, பா.ஜ., முயற்சிக்கிறது. ஆனால், மாநில அரசு மீது, பா.ஜ.,வினர், வீண் பழி சுமத்துகின்றனர்.
சீதாராம் யெச்சூரி, செயலர், மார்க்சிஸ்ட்  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: