சனி, 15 அக்டோபர், 2016

காவிரி தண்ணீர் கேட்டு தமிழக காங்கிரஸ், பாஜக உண்ணாவிரதம் ... தண்ணீர் கொடுக்க கூடாதென்று கர்நாடக காங்கிரஸ், பாஜக உண்ணாவிரதம்

நீர் திறப்பு குறைப்பு அசராத கர்நாடகா அரசு காவிரி வழக்கு, வரும், 18ல்,
விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதை பற்றி கவலைப் படாமல், நீர் திறப்பை, கர்நாடகா திடீரென குறைத்து உள்ளது. தமிழக தேவைக்காக, கர்நாடக அணைகளில் இருந்து, ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், முறைப்படி நீரை வழங்காமல், கர்நாடகா முரண்டு பிடித்து வருகிறது. இது தொடர் பான வழக்கு, வரும், 18ல், மீண்டும் விசாரணைக்கு வரஉள்ளது. இந்நிலையில், நான்கு அணைகளில் இருந்து, நீர் திறப்பை கர்நாடக அரசு திடீரென குறைத்துள்ளது.
ஹேரங்கி அணையில் இருந்து, நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. ஹேமாவதி அணையில் இருந்து, வினாடிக்கு, 150 கன அடி; கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து,3,422கனஅடி; கபினி அணையில் இருந்து, வினாடிக்கு, 550 கன அடி நீர் மட்டுமே, நேற்று திறக்கப்பட்டது.>இந்த தண்ணீரை, கர்நாடகா பெருமளவு பயன்படுத் திக் கொள்ளும்; எஞ்சிய தண்ணீர் தான், பிலிகுண்டுலு நீரளவை தளத்திற்கு வந்து சேரும். இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறையும்.கர்நாடக அரசின் இந்த செயல், தமிழக விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: