ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

அமெரிக்காவின் இரட்டை வேடம்... பாக்.,கிற்கு எட்டு போர் விமானங்களை வழங்க முடிவு

வாஷிங்டன்: 'பயங்கரவாதத்தை ஒழிக்கும் விஷயத்தில், அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, கூறிவரும் அமெரிக்கா, பயங்கரவாதத்தை துாண்டி விடும் பாகிஸ்தானுக்கு, அதிநவீன, 'எப் - 16' ரக போர் விமானங்களை வழங்க முடிவு செய்துள்ளது.
'பயங்கரவாதத்தால், நாங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம், சர்வதேச அமைதிக்கு, மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.அதை ஒழிக்க, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, அமெரிக்க அரசு தரப்பில், அடிக்கடி அறிவிக்கப்படுவது வழக்கம்.ஆனாலும், இந்தியாவுக்குள், பயங்கரவாதத்தை துாண்டி விடும் பாகிஸ்தானுடன், அமெரிக்கா, தொடர்ந்து மறைமுகமாக நட்பு பாராட்டி வருகிறது.   இரட்டை வேடம் இப்போதுதான் தெரிமா? இந்தியா முன்னேற கூடாதுன்னு ISIஐ தூண்டி விடுறது யாரு? இந்தியாவின் நண்பன் நண்பன்னு சொல்லிகிட்டே துரோகம் தான் செய்யும் அமெரிக்கா.
இந்நிலையில், இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு, அதிநவீன போர் விமானங்களை வழங்க, அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஒப்புதல் கிடைக்குமா?
இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவு துறையின் அறிக்கை, பார்லிமென்ட் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை குறித்து, அமெரிக்க ராணுவ பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:தெற்காசியாவில், அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க நட்பு நாடாக, பாகிஸ்தான் உள்ளது. அந்த நாட்டின்பாதுகாப்புக்கு உதவும் நோக்கில், 4,790 கோடி ரூபாய் மதிப்பில், 'எப் - 16' ரகத்தை சேர்ந்த, எட்டு போர் விமானங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், உள்நாட்டில் பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தலை, பாகிஸ்தான் சமாளிக்கும். இந்த உதவி, தெற்காசிய நாடுகளின் ராணுவ பலத்தில்எத்தகைய தாக்கத்தையும் உண்டாக்காது.'எப் - 16' போர் விமானங்களை இயக்குவது, பராமரிப்பது உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளையும், அமெரிக்கா வழங்கும். பார்லிமென்ட் ஒப்புதலுக்குப் பின், விற்பனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு, அதிநவீன போர் விமானங்களை வழங்க, அமெரிக்கா முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம், பயங்கரவாதத்தை ஒழிக்கும் விஷயத்தில், அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
ஒபாமாவுக்கு எதிர்ப்பு:

இந்நிலையில், ஒபாமாஅரசின், இந்த முடிவுக்கு, ஆளும் ஜனநாயக கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. 'இது தெற்காசிய பிராந்தியத்திற்கு மட்டுமின்றி, அண்டை நாடானஇந்தியாவிற்கும் ஆபத்தானது' என, எதிர்க்கட்சியான, குடியரசு கட்சி எம்.பி.,க்களும் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க பார்லிமென்டின் இரு சபைகளிலும், எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால், இது தொடர்பான தீர்மானம் தோல்வி அடையும் என,எதிர்பார்க்கப்படுகிறது.
பரிசீலனைக்கு 30 நாட்கள் அவகாசம்:
* அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் முடிவை பரிசீலிக்க, அந்நாட்டு பார்லிமென்டிற்கு, 30 நாட்கள் அவகாசம் உள்ளது* கடந்த, 1980களின் துவக்கத்தில், அமெரிக்க அதிபர் ரீகன் மற்றும் பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜெனரல் ஜியா - உல் - ஹக் ஆகியோரின் முயற்சியால், அமெரிக்காவிடம் இருந்து, எப் - 16 போர்விமானங்களை, பாக்., வாங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது* கடந்த, 1983 - 85 வரை, 40எப் - 16 போர் விமானங்களை, அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு வழங்கியது; அதன் பின், பாக்., அணுகுண்டு தயாரிப்பதாக கூறி, போர் விமான சப்ளை நிறுத்தப்பட்டது* அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல், ஆப்கன் போர் ஆகியவற்றைத் தொடர்ந்து, 2006ல், 36 அதிநவீன போர் விமானங்களை பாக்.,கிற்கு வழங்க, அமெரிக்கா முன்வந்தது* பயன்படுத்தப்பட்ட, 14எப் -16 போர் விமானங்களை, அமெரிக்கா, 2012ல், பாகிஸ்தானுக்கு வழங்கியது* இது தவிர, ஜோர்டானிடம் இருந்தும், நவீன விமானங்களை பாக்., வாங்கியது. தற்போது, பாக்., விமான படையில், எப் - 16 ரகத்தை சேர்ந்த, 76 போர் விமானங்கள் உள்ளன.
துாதருக்கு சம்மன்:
பாகிஸ்தானுக்கு, 'எப் - 16' போர் விமானங்களை, அமெரிக்கா வழங்குவதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வெளியுறவு செயலர் ஜெய்சங்கர், அமெரிக்காவிற்கான இந்திய துாதர் ரிச்சர்டு வர்மாவை அழைத்து, ''அமெரிக்காவின் முடிவு, இந்தியாவுக்கு அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் உதவி, இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே உதவும்,'' என்றார். வெளியுறவு அமைச்சகமும், அமெரிக்காவின் முடிவிற்கு அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
உதவ வேண்டாம்!
குடியரசு கட்சி எம்.பி.,யான, டெட் போ, ஜனநாயக கட்சி எம்.பி.,யான, துளசி கப்பார்டு ஆகியோர், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது:அமெரிக்க அரசு, பாகிஸ்தானுக்கு, இரண்டு லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. இருந்தபோதிலும், பாக்., தன் குணத்தைமாற்றியதாக தெரியவில்லை. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதைபாக்., கைவிட்டால் மட்டுமே, அந்நாடு,சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைய முடியும். அதுவரை, அமெரிக்க மக்களின் வரிப் பணத்தில், 'எப் - 16' போர் விமானங்களை, பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.
வலிமையான விமானம்:
'எப் - 16' ரக விமானங்கள், மிக வலிமையானவையாக கருதப்படுகின்றன. அவற்றில், மேம்பட்ட, 'பிளாக் சி.டி., 52' ரக போர் விமானங்கள் தான், பாக்.,கிற்கு வழங்கப்பட உள்ளன.காரிருளிலும், துல்லியமாக இலக்கை தாக்கக் கூடிய திறன், தொலைதுாரத்தில் உள்ள எதிரி விமானங்களை கண்டறியும் ஆற்றல், தாக்குதலில் இருந்து தன்னிச்சையாக தப்பித்து, தரையிறங்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள், இந்த விமானத்தில் உள்ளன.தினமலர்.com

கருத்துகள் இல்லை: