சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் கூடுதல் எஸ்பியாக பணிபுரிந்த ஹாரிஸ் நேர்மையாக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி , யாருக்கும் வளைந்து
கொடுக்கவில்லை என தெரிகிறது. ஜெயலலிதாவின் அந்தரங்க காவல்துறை ஆலோசகர் பதவியில் உள்ள ராமானுஜம் டிஜிபியாக இருந்தபோது, ஹரீஸ் மீது
விசாரணைக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவருக்கு
டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பழிவாங்கும்
நோக்கத்தோடு ஹரிசுக்கு பதவி உயர்வு வழங்காமல் அலைக்கழித்துள்ளனர்.
இவருக்குப் பின் பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
வழங்கப்பட்டுவிட்டது. உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக கடும் மன
உளைச்சலில் ஹரீஸ் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ஹரீஸ் மது
அருந்தியதாக கூறப்படுகிறது. அவரது உடல் அருகே மட்டன் பிரியாணியும்
இருந்துள்ளது.
மதுவில் விஷ மாத்திரைகள் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஹரீசின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரிய வரும். இந்த நிலையில், ஹரீஸ் தங்கியிருந்த அறையில் கடிதம் ஒன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றிவிட்டனர். ஆனால் கடிதம் தொடர்பாக போலீசார் எந்த தகவலும் அளிக்க மறுக்கின்றனர். இதனால் சாவில் சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.
இன்றுகாலை ஹரீஸின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டன. சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்லும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதுசம்பந்தமாக எழும்பூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அறையில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள், மட்டன் பிரியாணி மற்றும் சிலவகை மாத்திரைகளை தடயஅறிவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின்போது வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட உணவு வகைகளையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். ஆய்வுக்குப் பின்னரே ஹரீஸ் மரணம் குறித்த உண்மை நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே ஹரீஸ் நண்பர் ஒருவர் நேற்றிரவு வாட்ஸ் அப்பில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் ஹரீஸ் மரணம் தொடர்பான பரபரப்பு தகவல்கள் அடங்கியிருந்தது. அதில், ‘’ ஹரீஸ் காவல்துறையில் அரசியல்வாதிகளின் தலையீட்டை அனுமதிப்பதில்லை. அவர் 2008ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் 186வது இடம் பிடித்த திறமையானவர்.
தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் அடிமைகளாக இருக்கக்கூடாது என்பதை இந்த மரணம் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஹரீஸ் விஷயத்தில் எந்த அதிகாரிகளும் உதவவில்லை. தமிழக முதல்வரே உங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் தேவையில்லையென்றால் தயவு செய்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள். அதிகாரிகளை சாவடிக்காதீர்கள். மேலும் முன்னாள் டிஜிபி ராமானுஜம், பெண் உயர் போலீஸ் அதிகாரி பற்றியும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். மேலும் அவர் மனஇறுக்கத்தை போக்ககூடிய மாத்திரைகள் உட்கொண்டதால் தான் உயிரிழந்தார்’’ என்று கூறியிருந்தார். இத்தகவல்கள் பெரும் பரப்பு ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகள் கொடுத்த மனஅழுத்தம் காரணமாக உயிரிழந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே டிஎஸ்பி விஷ்ணுபிரியா, அதிகாரி முத்துக்குமாரசாமி ஆகியோர் உயரதிகாரிகள் டார்ச்சர் காரமணாக உயிரிழந்து அந்த வழக்குகளே இன்னும் முடிவுக்கு வராதநிலையில் மற்றொரு போலீஸ் உயர் அதிகாரி மர்மமான முறையில் உயிழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிகாரிகளுக்கு தேவையில்லாமல் தொந்தரவு கொடுக்கும் உயர் அதிகார் யார், யார்? என்ற பட்டியல் எடுக்கப்படுவதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கிடையில் விசாரணையை துரிதப்படுத்தி, ஹரீசுக்கு அழுத்தம் கொடுத்த உயர்அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உறவினர்கள் கண்ணீர்
ஹரீஸ் இறப்பு செய்தியை கேட்டு அவரது உறவினர்கள் கண்ணீருடன் கூறுகையில், “ஹரீசுக்கு கெட்டப்பழக்கம் எதுவும் கிடையாது. இதனால், அவர் உடல் நலக்குறைவால் இறந்திருக்க வாய்ப்பு இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழையும் அல்ல. ஹரீஸ் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. உரிய விசாரணை நடத்தி போலீஸ் அதிகாரிகள் உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். ஹரீசுக்கு திருமணத்திற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்ததது” என்றனர்
அதிகாரி என்.ஹரீஸ் (32) நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். இவர் எழும்பூர் போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் குடியிருப்புக்கு சென்ற ஹரீஸ் காலை 9 மணியாகியும் படுக்கை அறையில் இருந்து எழுந்திருக்கவில்லை. சந்தேகமடைந்த அவரது கார் டிரைவர் உள்ளே சென்று பார்த்தபோது ஹரீஸ் இறந்துகிடந்தார். போலீசார் சென்று ஹரிசின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கர்நாடகாவில் உள்ள ஹரீஸின் உறவினர்கள் சென்னை வந்தனர். போலீஸ் உயரதிகாரிகள் டார்ச்சர் காரணமாகத்தான், ஹரிஸ் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்படுகிறது. dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக