அ.தி.மு.க.,
- பா.ஜ., கூட்டணி தொடர்பான பேச்சு துவங்கி விட்டதாக,
வெளியான தகவலை அடுத்து, த.மா.கா., தலைவர் வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழகத்தில், 2014 லோக்சபா தேர்தலின் போது, காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. இதன்பின், கட்சி மேலிடம் தங்களை மதிக்கவில்லை என, காரணம் கூறி, காங்கிரசிலிருந்து தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார் வாசன். தன் தந்தை மூப்பனாரால், 1996ல் துவக்கப்பட்டு, பின் காங்கிரசில் இணைக்கப்பட்ட, தமிழ் மாநில காங்கிரஸ் பெயரில், மீண்டும் கட்சியை துவக்கினார். வரும் சட்ட சபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, த.மா.கா., போட்டியிட விரும்புகிறது. ஆனால், இதுதொடர்பாக நடந்த ரகசிய பேச்சில், த.மா.கா.,வுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே, 'சீட்' தரப்படும் என, அ.தி.மு.க., மேலிடம் தெரிவித்ததால், வாசனும், அவரது கட்சியின் மூத்த தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் வாசன் அதிர்ச்சி என்பதை நம்ப முடியாமல் இருக்கிறது அவரு சீனிலேயே இல்லை அப்புறம் என்னா ? "அதிர்ச்சி"
இதனால், ஒற்றை இலக்கத்தை இரட்டை இலக்கமாக மாற்ற, முதல்வரின் தோழி சசிகலாவுக்கு வேண்டியவர்கள் மூலமாக, துாது விட்டார் வாசன். இருந்தும், சாதகமான பதில் கிடைக்காததால், கலக்கத்தில் உள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள்தெரிவித்தன.
இருவரது பேச்சிலும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், அதன் எதிரொலியாக, பொதுக் கூட்டங்களில், பா.ஜ., மற்றும் மத்திய அரசை விமர்சிக்க, அ.தி.மு.க., பேச்சாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தி.மு.க., - தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சிகளை மட்டும் விமர்சித்து பேச, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இந்த சந்திப்பில் சாதகமான சூழ்நிலை உருவானதால் தான், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். தன் மகன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, முதல்வரை சந்திக்க நேரம் கேட்ட போது, உடனடியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், முதல்வர் ஜெயலலிதா, தமிழிசை சந்திப்பின் போதும், கூட்டணி குறித்து மேலோட்டமாக விவாதிக்கப்பட்டு உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com
வெளியான தகவலை அடுத்து, த.மா.கா., தலைவர் வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழகத்தில், 2014 லோக்சபா தேர்தலின் போது, காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. இதன்பின், கட்சி மேலிடம் தங்களை மதிக்கவில்லை என, காரணம் கூறி, காங்கிரசிலிருந்து தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார் வாசன். தன் தந்தை மூப்பனாரால், 1996ல் துவக்கப்பட்டு, பின் காங்கிரசில் இணைக்கப்பட்ட, தமிழ் மாநில காங்கிரஸ் பெயரில், மீண்டும் கட்சியை துவக்கினார். வரும் சட்ட சபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, த.மா.கா., போட்டியிட விரும்புகிறது. ஆனால், இதுதொடர்பாக நடந்த ரகசிய பேச்சில், த.மா.கா.,வுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே, 'சீட்' தரப்படும் என, அ.தி.மு.க., மேலிடம் தெரிவித்ததால், வாசனும், அவரது கட்சியின் மூத்த தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் வாசன் அதிர்ச்சி என்பதை நம்ப முடியாமல் இருக்கிறது அவரு சீனிலேயே இல்லை அப்புறம் என்னா ? "அதிர்ச்சி"
இதனால், ஒற்றை இலக்கத்தை இரட்டை இலக்கமாக மாற்ற, முதல்வரின் தோழி சசிகலாவுக்கு வேண்டியவர்கள் மூலமாக, துாது விட்டார் வாசன். இருந்தும், சாதகமான பதில் கிடைக்காததால், கலக்கத்தில் உள்ளார்.
ஆதரவாளர்கள் கலக்கம்:
இந்தக்
கலக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், அவருக்கு தற்போது அவருக்கு
அதிர்ச்சி செய்தி ஒன்று சென்றுள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பேச்சு
துவங்கி விட்டது; கிட்டத்தட்ட முடிவாகி விட்டது என்பதே, அந்தச் செய்தி.
அ.தி.மு.க., - பா.ஜ., இடையே கூட்டணி அமைந்து விட்டால், அதில், வாசனால் இடம்
பெற முடியாது. அதற்கு காரணம், 'மதசார்புள்ள பா.ஜ.,வுடன் ஒட்டும் இல்லை;
உறவும் இல்லை' என்று சொல்லித்தான்,
மூப்பனார், த.மா.கா.,வை ஆரம்பித்தார். 1999க்குப் பின்,
பா.ஜ.,வுடன் தி.மு.க., கைகோர்த்த போது, தி.மு.க., கூட்டணியை விட்டு,
த.மா.கா., வெளியேறியது. இன்று வரை பா.ஜ.,வை எதிர்ப்பதில், த.மா.கா.,
உறுதியாக இருக்கும் நிலையில், அந்தக் கட்சி இடம் பெறும், அ.தி.மு.க.,
கூட்டணியில், எப்படி இடம் பெறுவது என்பதே, வாசன் மற்றும் ஆதரவாளர்களின்
கலக்கம்.>
கொள்கையில் இருந்து விலகாது!
த.மா.கா., வட்டாரங்கள் கூறியதாவது:
மதசார்பற்ற சக்திகளோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் சிக்கல் எதுவும்
இல்லை. ஆனால், பா.ஜ.,வோடு, அ.தி.மு.க., கைகோர்த்தால், த.மா.கா.,
அக்கூட்டணியில் இடம் பெற வாய்ப்பில்லை. அப்படியொரு சூழ்நிலை உருவானால்,
மக்கள் நல கூட்டணியில் இணைந்து, த.மா.கா., போட்டியிடும் அல்லது, தனித்தே
தேர்தலை சந்திக்கும். இதுவே, த.மா.கா., தலைவர் வாசன் மற்றும் கட்சியின்
மூத்த தலைவர்களின் உறுதியான முடிவு. அடிப்படையான கொள்கைகளில் இருந்து கட்சி
விலகிச் செல்லாது.இவ்வாறு அந்த வட்டாரங்கள்தெரிவித்தன.
மத்திய அமைச்சர் ரகசிய பேச்சு?
அ.தி.மு.க.,
- பா.ஜ., கூட்டணி தொடர்பாக, மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.,
பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவடேகர், அ.தி.மு.க.,வின் துாதர் ஒருவருடன் பேச்சு
நடத்தியுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வட மாநில
தொழிலதிபர்
வீட்டில் இவர்களின் சந்திப்பு நடந்துள்ளது. அப்போது,
'பா.ஜ.,வுக்கு, 30 'சீட்'கள் ஒதுக்க வேண்டும்' என, அமைச்சர் கேட்டுள்ளார்.
20 'சீட்'கள் தர தயாராக இருப்பதாக, அ.தி.மு.க.,வின் துாதர் பதில்
அளித்ததாக, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன. இருவரது பேச்சிலும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், அதன் எதிரொலியாக, பொதுக் கூட்டங்களில், பா.ஜ., மற்றும் மத்திய அரசை விமர்சிக்க, அ.தி.மு.க., பேச்சாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தி.மு.க., - தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சிகளை மட்டும் விமர்சித்து பேச, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இந்த சந்திப்பில் சாதகமான சூழ்நிலை உருவானதால் தான், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். தன் மகன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, முதல்வரை சந்திக்க நேரம் கேட்ட போது, உடனடியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், முதல்வர் ஜெயலலிதா, தமிழிசை சந்திப்பின் போதும், கூட்டணி குறித்து மேலோட்டமாக விவாதிக்கப்பட்டு உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக