திங்கள், 15 பிப்ரவரி, 2016

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீகும் இணைந்தது

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்துள்ளது.
அத்தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படும் சூழலில், அரசியல் கூட்டணி தொடர்பான அறிவிப்புகளும் தொடர்ந்து வெளிவர தொடங்கியுள்ளன.
திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியில் தமது கட்சியும் இணைகிறது என்பதை முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொஹைதீன் திங்கட்கிழமை செய்தியாளர்களிடன் உறுது செய்தார்.

திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்து பேசிய காதர் மொஹைதீன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, மதசார்பற்ற வலுவான கூட்டணி உருவாகி வருவதாகவும், ஜனநாயகம், சமுக நீதி கொள்கைகள் போன்ற மக்களுக்கு நன்மை வழங்க கூடிய கொள்கைகளை கொண்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
தேமுதிகவுடனான கூட்டணியை உருவாக்கும் நோக்கத்தில் திமுகவின் தலைவர் கருணாநிதி நேரடியாக அழைப்பு விடுத்திருக்கும் சூழலில், பிரேமலதா விஜயகாந்தின் இந்த விமர்சனம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து சமுக வலைதளங்களில் அதிகமான விமர்சனங்கள் வெளிவருவதாகவும் கூறிய அவர், இந்த இரண்டு கட்சிகளுமே பல்வேறு ஊழல்களில் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  bbc.taiml.com

கருத்துகள் இல்லை: