செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே அதிமுகவிடம் காசு வாங்கி விட்டாரா? காலில் விழுவது ஓகேயாம்

தந்தி டிவியின் டாக் க்ஷோவில் திமுக ராதாகிருஷ்ணன் பேசும்
பொழுது சட்டசபையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் காலில் விழுந்தது சட்டசபையின் மாண்புக்கு இழுக்கு என்று குறிப்பிட்டார்.அதிமுக சார்பாக பேச வந்த மாப்பா பாண்டியராஜன் திரு திரு என்று முழிக்க அவரை காப்பற்றும் முகமாக ரங்கராஜ் பாண்டே தலையிட்டு அதுலென்ன தவறு என்று கேட்டார். அது மட்டும் அல்ல விட்டேனா பார் என்கின்ற பாணியில் ராதாகிருஷ்ணனோடு மல்லுகட்டி காலில் விழுவது தவறே இல்லை என்று சத்தம் போட்டார். அவர்களது அமைச்சர் அவர்களது முதல்வர் காலில் விழுந்தால் உங்களுக்கு என்ன வந்தது என்றும் கேட்டார்.
இங்கேதான் பிடிபட்டான் சாமி ரங்கராஜ் பாண்டே.  ஜெயலலிதாவின் வீட்டில் இது நடந்து இருந்தால் யாரும் குறைகூற மாட்டார்கள். சட்டசபையின் மாண்பை காக்கவேண்டும் என்று உறுதி மொழி எடுத்துதான் பதவி பிரமாணம் செய்து கொண்டார்கள்.  அதற்கு சான்றாக முன்பு நிதியமைச்சர் அன்பழகன் கலைஞரை புகழ்ந்து பேசியதை  படித்து காட்டினார்.  ஒரு வரை புகழ்வதுவும் அதுவும் அன்பழகனும் கலைஞரும் எவ்வளவு நீண்ட நாள் நண்பர்கள் அவர்களுக்கு உள்ள பற்று பாசம் பதவிக்காக துண்டு போடும் மாப்பா பாண்டியன் பன்னீரு போன்றதா?  முழு இந்திய ஊடகங்களும் இந்த காலில் விழும் காட்சியை கண்டு  எள்ளி நகையாடுகிறார்கள்

கருத்துகள் இல்லை: