செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

SUPER ! வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் ......அவசியம் பாருங்கள் மக்களே...

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் – சினிமா விமர்சனம்"
ஒரு சின்ன கதையை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பில் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அபநிந்திரன்.
அமெரிக்காவில் இருக்கும் சாப்ட்வேர் என்ஜீனியரான ஹீரோ பிரவீன் குமார்,  தனது அப்பாவின் கேன்சர் சிரிச்சைக்காக உடனடியாக தாயகம் திரும்ப வேண்டிய நிலைமை. அதுவும் அமெரிக்கா சென்ற 4 மாதங்களிலேயே ஊர் திரும்புகிறார்.
வந்த இடத்தில் தந்தையின் சிகிச்சைக்காக பணம் தேடி அலைகிறார் பிரவீன். கிடைக்கவில்லை. கடைசியில் கந்துவட்டிக்காரரான அருள்தாஸிடம் அறுபது லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார். கடனை குறித்த காலத்தில் கட்ட முடியாமல் போக, வீடு தேடி வந்து மிரட்டுகிறார் அருள்தாஸ்.
வீட்டில் இருக்கும் பிரவீனின் மனைவியை பார்த்து ஜொள்ளுவிடும் அருள்தாஸ், இதையே சாக்காக வைத்து அடிக்கடி வீட்டுக்கு வந்து போக.. பிரவீன் பதைபதைக்கிறார். எப்படியாவது கடனை அடைத்துவிடலாம் என்று எண்ணுகிறார்.
இந்த நேரத்தில்தான் ஹீரோவின் மூளை மழுங்குகிறது. கிரிமினலாக மாறுகிறது. தனது முன்னாள் காதலியும், இப்போது ஒரு டாக்டருடன் திருமணமானவருமான பூஜாவை பார்த்தவுடன் அவருக்குள் வேறொரு சபலம் தட்டுகிறது.
பூஜாவுடன் தான் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதை நினைத்துப் பார்க்கும் பிரவீன்.., அதை வைத்து தனது நெருங்கிய நண்பனான பால சரவணன் மூலமாக பிளாக்மெயில் செய்து 50 லட்சம் ரூபாயை பூஜாவிடமிருந்து பறிக்க நினைக்கிறார். அதேபோல் பால சரவணனும் பூஜாவிற்கு போன் செய்து அவளை மிரட்ட.. கொஞ்சம், கொஞ்சமாக 10 லட்சம் ரூபாய் வரையிலும் கறக்கிறார்கள்.
இதற்கு மேல் தன்னிடம் பணமில்லை என்று சொல்லும் பூஜா தன் கணவன் சட்டவிரோதமாக அவனது கிளினிக்கில் யாரோ ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்திருக்கிறான் என்பதைச் சொல்லி அவனை பிளாக்மெயில் செய்து பணத்தை சம்பாதித்துக் கொள்ளும்படி தூண்டிவிடுகிறாள்.
பால சரவணனும், ஹீரோவும் டாக்டர் ரகுவை பிளாக் மெயில் செய்ய.. அவனோ தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி தத்தளிக்கிறான். ஆனாலும் பிரச்சினை பெரிதாகாமல் இருக்க வேறு வழியில்லாமல் அந்த கருக்கலைப்பை யாருக்காக செய்தானோ, அந்தப் பெண்ணின் தகப்பனான ஞானவேலிடம் சென்று பிரச்சினையை வெளியில் சொல்லாமல் இருக்க 1 கோடி ரூபாய் கேட்கிறான்.
ஞானவேல் பணக்காரர் என்றாலும் இப்போது  அவரிடமும் பணம் இல்லை.. என்ன செய்வது என்று யோசிக்கிறார். இந்த நேரத்தில் அவரிடம் ஒரு கட்டப் பஞ்சாயத்து கேஸ் வருகிறது. பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் போன இரண்டு பில்டிங் கான்ட்ராக்டர்களைப் பற்றி ஞானவேலிடம் ஒருவர் புகாருடன் வர.. அந்த காண்ட்ராக்டர்களை மிரட்டி ஒரு கோடி ரூபாயை வசூல் செய்ய திட்டம் போடுகிறார் ஞானவேல். அதேபோல் அவர்களை மிரட்டவும் செய்கிறார்.
திடீரென்று ஒரு கோடிக்கு எங்கே போவது என்று யோசித்த காண்ட்ராக்டர்கள் தங்களுடன் பழக்கமுள்ள ஒரு ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி செய்த பாலியல் சேட்டைகள் தங்களிடம் வீடியோவில் இருப்பதாகச் சொல்லி அதை வெளியிடாமல் இருக்க 2 கோடி ரூபாயை அவரிடம் தட்சணையாகக் கேட்கிறார்கள். பணம் கிடைத்தால் ஒரு கோடியை ஞானவேலிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு கோடியை தாங்களே வைத்துக் கொள்ளலாம் என்பது இவர்களின் திட்டம்.
இந்த ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியும் வேறொரு திட்டம் போடுகிறார். மாநில உள்துறை செயலாளர் மீதான லஞ்ச ஒழிப்பு புகாரை கிடப்பில் போட 10 கோடி கேட்கிறார். உள்துறை செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரின் அறக்கட்டளை நிர்வாகம் செய்திருக்கும் கோல்மால்களை சுட்டிக் காட்டி அதை கிளியர் செய்ய 50 கோடி கேட்கிறார். அந்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கில் எதிராளிக்கே தீர்ப்பாகும்வகையில் வாதத்தின்போது தான் விட்டுக் கொடுப்பதாகவும் இதற்கு தனக்கு 100 கோடி வேண்டும் என்றும் கேட்கிறார்.
இப்போது இது சென்னையில் இருக்கும் ‘பெரியவர்’ என்றழைக்கப்படும் டானின் வசம் வந்து நிற்கிறது. ஒரு சந்தேகத்தில் இது எப்படி ஆரம்பித்தது என்று பெரியவர் அலசி, ஆராயத் தொடங்க.. சங்கிலித் தொடர் போல பலரும் வரிசையாக மாட்டுகிறார்கள். கடைசியாக ஹீரோவும், அவரது நண்பனும் என்ன ஆனார்கள்..? பெரியவர் அவர்களை என்ன செய்தார் என்பதும்.. பெரியவரிடமிருந்து அவர்கள் தப்பித்தார்களா என்பதும்தான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதையாக்கம்.
ஒரு குற்றம் எப்படியெல்லாம் பயணித்து எவரையெல்லாம் குற்றம் செய்ய வைக்கிறது என்பதை நூல் பிடித்தாற்போல் அடுத்தடுத்த நம்பகத்தனமான காட்சிகளின் மூலம் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இந்தச் சிறப்பான திரைக்கதைக்காகவும், சுவையான இயக்கத்திற்காகவும் நிச்சயம் பாராட்டுக்குரியவர் இந்த அறிமுக இயக்குநர்.
கார்த்திக் என்கிற ஹீரோ புதுமுகம் என்றாலும் கதைக்குத் தகுந்தாற்போல் அளவாக நடித்திருக்கிறார். அதிகம் மெனக்கெடாத அளவுக்கு அவருக்கான கேரக்டர் ஸ்கெட்ச் அமைக்கப்பட்டிருப்பதால் ரசிக்க வைத்திருக்கிறார். இறுதியாக பெரியவரிடம் அவர் வேண்டுமென்றே தோற்றார் என்பதை சொல்லிவிட்டுப் போகும் காட்சியில் தன் மீதான ரசிகனின் பரிதாப உணர்வை வரவழைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
மனைவியாக நடித்த சனம் ஷெட்டியைவிடவும் பூஜாவாக நடித்த ஷாலினி வட்னிகட்டிக்கு நிறையவே வாய்ப்பு. இவரும் கொள்ளை அழகுடன் இருக்கிறார். குளோஸப் காட்சிகளில் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். சிறந்த இயக்கத்தினால் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷாலினி.  ஹீரோயின் தேடுபவர்கள் இவரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெரியவராக நரேன். வழக்கம்போல அவருடைய டயலாக் மாடுலேஷனும், பாடி லாங்குவேஜும் அந்த பெரிய தாதா கேரக்டருக்கு வலு சேர்த்திருக்கிறது. “இப்பத்தான்..  இப்படியொரு மகன் எனக்கு இல்லையே என்றொரு ஏக்கம் எனக்கு வந்திருக்கு…” என்று கடைசியாக ஜெயபிரகாஷிடம் சொல்லும் காட்சியில் கண்ணீர் சிந்தவில்லையென்றாலும் நெகிழ வைத்திருக்கிறார் நரேன்.
ஜெயபிரகாஷ், காண்ட்ராக்டர் நண்பர்கள், அருள்தாஸ், ரிட்டையர்டு போலீஸ் அதிகாரயாக நடித்திருப்பவர் என்று அனைவருமே தங்களது கேரக்டரை உணர்ந்து நம்மை ஈர்த்திருக்கிறார்கள்.
படத்தின் பிற்பாதியில் திரைக்கதையின் ஊடேயே நகைச்சுவை மிளிர்வதால் தியேட்டரில் அவ்வப்போது கைதட்டல்களும், சிரிப்பலைகளும் எழும்பி எழும்பி அமைகின்றன. இந்த குபீர் சிரிப்பை வரவழைத்திருக்கும் அனைத்து கேரக்டர்களுக்கும் ஒரு ஷொட்டு..!
சாரங்கராஜனின் ஒளிப்பதிவில் குறையில்லை. ஜோஷ்வா ஸ்ரீதர் பின்னணியில் இசைத்திருக்கிறார். இவர்களைவிடவும் கலை இயக்குநர்தான் இந்தப் படத்தில் பாராட்டுக்குரியவர்.. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இந்த 5 சிச்சுவேஷன்களுக்கேற்றவாறு இடங்களை தேர்வு செய்து செட் பிராப்பர்ட்டீஸ்களை வைத்து இயக்குநருக்கு பெரிதும் உதவியிருக்கிறார். பாராட்டுக்கள்.
குறையில்லாத படமே இருக்க முடியாது. இது நமக்குக் குறையாக தெரியலாம். இயக்குநருக்கு இதுவே நியாயமாக இருக்கலாம். தான் செய்த தவறை உணர்ந்த ஹீரோ பூஜாவிடம் வந்து பிளாக் மெயில் செய்தது தான்தான் என்பதை ஒத்துக் கொள்வதும், இதற்கு பூஜா, அதிகப்பட்ச அதிர்ச்சியாகாமல் லேசாக ஷாக்காகி பின்பு சுதாரித்து தானும் தவறு செய்ததை ஒத்துக் கொண்டு கதைக்கு மங்களம் போடும் காட்சி மிக யதார்த்தம்தான்..!
சின்ன பட்ஜெட்டில் சிறிய கலைஞர்களைக் கொண்டு சிறந்த கதையில் அதைவிட சிறப்பான திரைக்கதையில் இப்படியொரு படத்தை எடுத்துக் கொடுத்திருக்கும் இயக்குநர் அபநிந்திரனுக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..! இந்தாண்டின் கடைசி வெற்றிப் படமாக இது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
அவசியம் பார்க்க வேண்டிய படம். மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!  .tamilcinetalk.com/vellaiya-irukkiravan-poi-solla-maattaan-movie-reviews/
பிரசார நெடியில்லாமல், கந்து வட்டியின் கொடுமையை சொல்லும் படமாக 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' :-

''எங்கோ ஒரு கோடியில் வைக்கப்பட்ட ஒரு புள்ளி தலைநகரத்தில் ஒரு பூகம்பமாக வெடிப்பதை பற்றிய கதைதான், 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்.' கந்து வட்டி எப்படி ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் புரட்டிப்போடும் என்பதை பிரசார நெடியில்லாமல் சொல்லியிருக்கிறோம்.

சமுதாயம் ஒருவரை குறைத்து மதிப்பிடுவதும், அதிகமாக மதிப்பிடுவதும் அவரவர் சூழ்நிலைகள்தான் நிர்ணயிக்குமே தவிர, அவர்   களின் குணநலன்கள் இல்லை என்பதையும் இதில் கூறியிருக்கிறோம்.

பிரவீன் குமார், ஷாலினி வட்னிகடி, கார்த்திக் குமார், சனம் ஷெட்டி, பால சரவணன், 'ஆடுகளம்' நரேன், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், பைவ் ஸ்டார் கிருஷ்ணா மற்றும் பலர் நடிக்கிறார்கள். சாரங்கராஜன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். பிரபல ஒளி

கருத்துகள் இல்லை: