ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

லண்டன் இன்டிபென்டன் நாளிதழ் இனி ஆன்லைன் மட்டும்தான்


லண்டன்: இங்கிலாந்தின் பிரபல நாளிதழ் 'இண்டிபண்டன்ட்', அடுத்த மாதம் மூடப்பட்ட உள்ளது. ஆன்லைனில் கவனம் செலுத்த அதன் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். முப்பது ஆண்டுகளாக இங்கிலாந்தில் வெளிவரும் நாளிதழ் இண்டிபண்டன்ட். இதன் உரிமையாளர் எவ்ஜனி லெபதேவ். காலத்திற்கேற்ப மாற நி னைத்த இந்நாளிதழ், முழுக்க முழுக்க 'டிஜிட்டல்மயமாக' முடிவு செய்துள்ளது. இதனால்அடுத்த மாதம் 26ம் தேதியுடன் தனது அச்சுப் பதிப்பை நிறுத்திக்கொள்ளப் போகிறது. இப்பத்திரிகையின் ஞாயிறு பதிப்பும் பிரபலமானது. இதையும் மார்ச் 20ம் தேதியுடன் நிறுத்திக்கொள்ளப் போகின்றனர். நாளிதழை ஜான்ஸ்டன் பிரஸ் என்ற நிறுவனத்திற்கு விற்கின்றனர்.


இப்பத்திரிகை உரிமையாளர் லெபதேவ் கூறும்போது, ''டிஜிட்டல் பத்திரிகைக்கு தான் எதிர்காலம் உள்ளது. எனவே நாளிதழை விற்றுவிட்டு ஆன்லைனில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக ஆன்லைன் செய்திப்பிரிவை மேலும் வலுப்படுத்த உள்ளோம். அதில் இன்னும் அதிகமாக முதலீடு செய்வோம். புதுமையை புகுத்துவதில் முன்னோடியாக இருக்கும் நாங்கள், இதிலும் முன்னோடியாக இருப்போம். எங்கள் இணையதளத்திற்கு ஏற்கனவே 58 மில்லியன் வாசகர்கள் உள்ளனர். ஏற்கனவே எங்கள் இணையதளம் லாபத்தில் இயங்குகிறது. இனிமேல் எங்கள் லாபம் 50 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: