கதறலுடன் நமது அலுவலகத் துக்கு வந்த அந்த தொலைபேசி அழைப்பு இடியாய் இறங்கியது.
""நான் ஒரு தனியார் கல்லூரி மாணவி பேசுறேன். திரு மணத்துக்கு முன்பே என்னோட
லவ்வரால கர்ப்பமாகிட்டேன். அபார்ஷன் பண் ணிடு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு
சொல்லி, சென்னை நீலாங் கரையிலுள்ள சாந்தி மருத் துவமனைக்கு
கூட்டிக்கிட்டுப் போனான். டாக்டர் மெர்லின் செரியன்ங்குறவங்க எனக்கு
அபார்ஷன் பண்ணும் போது ஏற்பட்ட வலி கொஞ்சநஞ்சமில்லீங்க. உடல் ரீதியான
பாதிப்பு ஒருபக்கம் இருக்க, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன காதலனும்
விட்டுட்டுப் போயிட்டான்.
இதனால, என் வாழ்க்கையே கேள்விக் குறியாகி மருத்துவமனைக்கும் வீட்டுக்கும்னு அலைஞ்சுக்கிட்டிருக்கேன். அறியாத வயசுல தப்புப்பண்ணிட்டு வர்ற மாணவிகளுக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பவேண்டிய பெண் டாக்டர்கள், காசுக்காக கருக் கொலை’ செய்றாங்க. என்னை மாதிரி நிறைய மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்காங்க. இதை, நக்கீரன்தான் வெளியில கொண்டு வந்து தண்டிக்க ணும்''’என்று மாணவி கண் கலங்க, நாம் இன் வெஸ்டிகேஷ னில் இறங்கிய போதே முதல் ஷாக்... மாணவிக்கு அபார்ஷன் செய்த பிரபல சாந்தி மருத் துவமனையின் டாக்டர் மெர்லின் செரியன் எம்.பி.பி.எஸ் படித்தவர் அல்ல என்பதுதான்.
அலோபதி (எம்.பி.பி.எஸ்.) மருத்து வம் படித்து அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்களே திருமணம் ஆகாத பெண் களுக்கு கருக்கலைப்பு செய்ய கடுமையான சட்ட விதிகள் உள்ளன. அப்படியிருக்க, எம்.பி.பி.எஸ். படிக்காதவர் கருக்கொலை செய்கிறாரா? என்ற அதிர்ச்சியுடன் அடுத்தக்கட்ட இன்ஸ்வெஸ்டிகேஷனில் இறங்கினோம். கல்லூரி மாணவியை கர்ப்ப மாக்கிய காதலனைப்போல, டாக்டர்(?) மெர்லின் செரியனை செல்ஃபோனில் தொடர்புகொண்டோம். ""நாளைக்கு காலையில 8:30 மணிக்கு உங்க லவ்வரை கூட்டிக்கிட்டு சாந்தி ஹாஸ்பிட்டல் வந்துடுங்க. கைனகாலிஜிஸ்ட் (மகப்பேறு மருத்துவர்) டாக்டர் பத்மாவதி இருக் காங்க. ஸ்கேன் பண்ணிப் பார்த்துட்டு அபார்ஷன் பண்ணிடலாம். அமவுண்ட் எவ்வளவுன்னு அவங்களே சொல்வாங்க'' என்றார் சேல்ஸ்கேர்ளைப்போல. மறுநாள் காலையில் டாக்டர்(?) மெர்லினிடம் இருந்து நமது எண்ணுக்கு ஃபோன். ""என்ன சார் கூட்டிக்கிட்டு வர்றேன்னு சொன்னீங்க வரல''’என்று அக்கறையோடு கேட்டார். அப்படியொரு, லவ்வர் இருந்தால்தானே நாம் அழைத்து செல்ல? அவ்வ்! என்று நமது மைண்ட் வாய்ஸ் மங்காத்தா ஆட, கொஞ்சம் சமாளித்துவிட்டு, பிறகு சாந்தி மருத்துவ மனைக்கு புகைப்படக்கலைஞருடன் சென் றோம். ஒரிஜினல் மருத்துவரே தோற்று விடும் தோரணையில் நோயாளிகளுக்கு கன்சல்டிங் பண்ணிக்கொண்டிருந்தார் மெர்லின் செரியன். அதை, அப்படியே சீக்ரெட் வீடியோ எடுத்துக்கொண்டோம்.யார் இந்த மெர்லின் செரியன்? சாந்தி மருத்துவமனையின் நர்ஸுகளிடம் விசாரித்தபோதுதான் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை அள்ளி வீசுகிறார்கள். ""மெர் லின், ஆயுர்வேதம் மருத்துவம் படித்தவர். புனே இன்ஸ்டிட்டியூட்ல ஏதோ ஒரு கோர்ஸை படிச்சுட்டு எம்.டி. டாக்டர்ன்னு போட்டுக்கிறாங்க. ஆனா, அலோபதி சிகிச்சையளிக்கும் இவர் சாந்தி மருத்துவ மனையின் டியூட்டி டாக்டரா இருக்கிறது மட்டுமில்ல, எங்க மருத்துவமனையின் ஓனர் டாக்டர் பத்மாவதிக்கு ஆல் இன் ஆல் இவங்கதான். இவங்க ரெண்டுபேரும் சேர்ந்துதான் தப்புதண்டா பண்ணிட்டு வர்ற மாணவிகளுக்கு கர்ப்பம் கலைக்குற பாவப் பட்ட வேலையை செய்றாங்க. அதுமட்டு மில்ல, இதே நீலாங்கரைபகுதியில் சரஸ்வதி நகரில், மெர்லின் தனியா லீலா பாலி க்ளினிக் கும் நடத்திக் கிட்டிருக்காங்க.
அங்கேயும் தன்னை ஒரு எம்.டி. அலோபதி மருத்துவர் மாதிரி போர்டு வைத்துக்கொண்டு அலோ பதி ட்ரீட்மெண்ட் கொடுத் துக்கிட்டிருக்காங்க. டாக்டர் மெர்லின் பேருக்கு மேல டாக்டர் அப்துல் ரகுமான்னு பேரு மட்டும்தான் இருக்கும். ஸ்டேன்லி மருத்துவமனை யில் எலும்பு டாக்டரா இருந்தவர், இந்த க்ளினிக்குக்கு வர்றதே இல்லை. இது எவ்வ ளவு பெரிய சீட்டிங்? மக்களின் உயிருக்கு எவ்வளவு பெரிய ஆபத்து? அதுமட்டுமல்ல, அங்கேயும் கருக்கலைப்பு ஆபரேஷன்களை செய்வார். இதுகுறித்து, நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக இருந்த சார்லஸ், இன்ஸ்பெக்டர் தேவராஜ் இருக்கும் போது புகார்கள் குவிந்தன. ஆனால், கொடுக்கவேண்டியதை கொடுத்து போலீ ஸின் துணையுடனேயே இப்படிப்பட்ட குற்றங்களை பண்ணிக்கிட்டிருக்காங்க''’என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்கள்.
நீலாங்கரை சரஸ்வதி நகரிலுள்ள லீலா பாலி க்ளினிக்’குக்கு சென்றபோது, "ஹூம்... ஒரிஜினல் டாக்டருக்குக்கூட இவ்ளோ கூட்டம் வராதுபோலிருக்கே'’என்று அங்க லாய்க்கும் அளவுக்கு நோயாளிகளின் கூட்டம் குவிந்திருக்கிறது. ஆயுர்வேத மருத் துவரான மெர்லின் செரியன், அனைத்துவித வியாதிகளுக்கும் ஆங்கில மருந்துகளை எழுதிக்கொடுத்து அலோபதி சிகிச்சை அளித்துக்கொண்டிருந்ததை உறுதி செய்து கொண்டோம். (ஆதாரம் அவர் எழுதி க்கொடுத்த அலோபதி மருந்துச்சீட்டு)"கருக்கொலை செய்வது குற்றமில்லை யா?' மெர்லினிடமே நாம் கேட்டபோது, ""நான் எந்த அபார்ஷனும் செய்வதில்லை. மகப்பேறு டாக்டர் பத்மாவதி மேடம்தான் பண்ணுவாங்க. எதுவா இருந்தாலும் அவங்ககிட்ட பேசிக்கோங்க''’என்றவரிடம், "ஆயுர்வேதம் படித்துவிட்டு, எம்.டி. அலோபதி படித்ததுபோல் பெயர் பலகை வைத்துக்கொண்டு அலோபதி சிகிச்சை அளிக்கிறீர்களே இது சரியா?' என்று கேட்டபோது... முதலில் மறுத்தவர், பிறகு “""என்ன சார் இது? எல்லோருமே என்னை மாதிரிதானே ட்ரீட்மெண்ட் பார்க்கு றாங்க?''’என்று ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தார்.முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்த, சென்னை நீலாங்கரையிலுள்ள சாந்தி மருத்துவமனையின் உரிமையாளரும் மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக் டர் பத்மாவதி நம்மிடம், ""எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்களை மருத்துவமனையில் ட்யூட்டி டாக்டராக வேலைக்கு சேர்த்தா மாசம் 70,000 லிருந்து 80,000 –ரூபாய்மேல சம்பளம் கொடுக்கவேண்டியிருக்கு. இந்த மாதிரி, ஆயுர்வேதம் படிச்ச டாக்டர்ன்னா 20,000 லிருந்து 30,000 ரூபாய் சம்பளம் கொடுத்தா போதும். அதனாலதான் மெர்லினை வேலைக்கு வெச்சிருக்கேன்'' என்று ஈவு இரக்கமில்லாமல் பேசி, நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தவர், ’’""திருமணமாகிடுச்சுன்னு ஒரு பெண்ணை கூட்டிட்டு வர்றான்னா, அவன் அந்த பொண்ணோட கணவன்தான்? அவங்க ரெண்டு பேருக்கும் திருமணம் ஆகிடுச் சான்னு மேரேஜ் சர்டிஃபிகேட்டை எல்லாம் வாங்கி பார்த் துட்டா அபார்ஷன் பண்ண முடியும்?''’என்று ஓப்பன் ஸ்டேண்ட்மெண்டாகவே சொல்லி நம்மை திகைக்க வைத்தார் பத்மாவதி. டாக்டர் பத்மாவதியிடம் பேசிமுடித்த, அடுத்த 10-வது நிமிடத்தில் 99948 35609 என்ற எண்ணிலிருந்து நமக்கு ஃபோன், “""நான் நீலாங்கரை எஸ்.ஐ. திரு நாவுக்கரசு பேசுறேன். சாந்தி ஹாஸ்பிட்டல் டாக்டருக்கு ஃபோன் பண்ணுனீங்களாமே... கம்ப் ளைண்ட் கொடுக்கிறதுக்காக போலீஸ் ஸ்டேஷன் வந்துக் கிட்டிருக்காங்க. யார் நீங்க? எதுக்காக கால் பண்ணுனீங்க?'' என்று மிரட்டல் தொனியில் கேட்டார். ""அடடே... ஒரு சாதா ரண பப்ளிக் கம்ப்ளைண்ட் கொடுத்தாலே பல தடவ அலைய விடுவீங்க. ஆனா, இப்படிப்பட்ட டாக்டர் பத்மாவதி கம்ப் ளைண்ட் கொடுக்கிறதுக்கு முன்னாடியே, ஆக்ஷன்ல இறங்குற உங்க அதிரடி போலீஸ் பணிக்கு ஆஸ்கர் விருதே கொடுக்க லாம். நான் நக்கீரன் நிருபர்''’என்றதும் ஃபோன் கட் ஆனது.நக்கீரன் ஆபரேஷனில் சிக்கிய ஆயுர்வேத டாக்டர் மெர்லின், அவரது குற்றத்துக்கு காரணமாக இருந்த டாக்டர் பத்மாவதி, துணையாக இருந்த டாக்டர் அப்துல் ரகுமான், இவர்களின் குற்றங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும் நீலாங் கரை காவல்நிலைய காக்கிகள் எல்லாமே ஸாம்பிள்கள்தான். ஆயிரம் ஆயிரம் மெர்லின்கள் தமிழகம் முழுக்க, பிரபல தனியார் மருத்துவமனைகளில் குறைந்த சம்பளத்திற்காக பணியில் சேர்ந்து சட்டத்துக்கு புறம்பாக அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டி ருக்கிறார்கள். காரணம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவத்தை அரசும் மக்களும் புறக்கணித்துவிட்டு அலோபதி என்கிற ஆங்கில மருத்துவத்தை மட்டுமே வளர்த்தெடுப்பதுதான். மேலும், அலோபதி படிக்காமல் போலியாக மருத்துவ சிகிச்சை அளிக் கும் மருத்துவமனைகள்- டாக்டர்கள் மீது சுகாதாரத்துறை, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், சென்னை அண்ணாநகரி லுள்ள இந்திய மருத்துவ கவுன்சில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு துணையாக இருப்பதுதான்!
-மனோ சௌந்தர்
படங்கள்: எஸ்.பி.சுந்தர் nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக