சனி, 20 பிப்ரவரி, 2016

தினமலர்: காங்கிரஸ் அதிர்ச்சி....வெள்ளம்பாதித்த தொகுதிகளை திமுகவே எடுத்துகொள்ளும்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.,வே போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், காங்., நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்தாண்டு அக்., மாதம் துவங்கி டிச., மாதம் வரை பெய்த பெரு மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது; நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களிலும் சேதம் ஏற்பட்டது.நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களிலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு செய்திருந்தால், எப்படியாவது இவர்களுக்குள் கசப்பு ஏற்படவேண்டும் என்று விரும்புவது தெரிகிறது. கசப்பு தொண்டரகளை சோர்வடைய செய்யும். அடிக்கடி திமுகவுக்கு ஏற்படும் விபத்து இதுதான்.  
< இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது என்ற கருத்து, பொதுமக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இதனால், உடைமைகளை இழந்த பொதுமக்களின் கோபம், அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது.

இம்மாவட்டங்களில், ஆளுங்கட்சி செல்வாக்கு சரிந்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, இத்தொகுதிகளில் போட்டியிட்டால், அ.தி.மு.க.,வை எளிதாக வீழ்த்தலாம் என்ற எண்ணம் தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து, திருவள்ளூரில் உள்ள, 10 தொகுதிகள், சென்னையில் உள்ள, 16 தொகுதிகள், காஞ்சிபுரத்தில் உள்ள, 11 தொகுதிகள், கடலுாரில் உள்ள, ஒன்பது தொகுதிகளிலும் போட்டியிட, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துாத்துக்குடியில் உள்ள, ஆறுதொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் திட்டம், தி.மு.க.,விடம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தொகுதிகளில் சிலவற்றில் போட்டியிட, காங்., கட்சியும் விரும்புகிறது. தி.மு.க.,வுடன் கூட்டணி முடிவான நிலையில், காங்., நிர்வாகிகள் பலரும் தொகுதி தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதற்காக, தி.மு.க.,வினரை சந்தித்து ஆதரவு திரட்ட துவங்கியுள்ளனர்.அப்போது, 'இந்த தொகுதிகளை மறந்து விடுங்கள்; மற்ற மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை மட்டும் கேட்டுப் பெறுங்கள்' என, தி.மு.க.,வினர், காங்கிரசாரிடம் கூறி வருகின்றனர். இதனால், காங்கிரஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

- -நமது சிறப்பு நிருபர்- -

கருத்துகள் இல்லை: