புதன், 17 பிப்ரவரி, 2016

மயிலாப்பூர் தொகுதிக்கு குஷ்புவும் நக்மாவும்..... நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி

மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட குஷ்புவும், நக்மாவும்
குஷ்புவின் வீடு சாந்தோமில் உள்ளது. தான் வசிக்கும் தொகுதி என்பதாலும், வெள்ளம் பாதித்த நேரத்தில், மீனவர்கள் மற்றும் குடிசை பகுதி மக்களுக்கு, தன் சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை குஷ்பு வழங்கியதாலும், அவர் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் என, அவரின் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். அதேநேரத்தில், குஷ்புக்கு போட்டியாக, கட்சியின் மகளிர் அணி பொது செயலர் நக்மாவும், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதால், காங்கிரசில் பரபரப்பு உருவாகி உள்ளது.
>கடும் மோதல் ஏற்படும்!

காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:காங்கிரசில் குஷ்புவை விட நக்மா சீனியர். மயிலாப்பூர் தொகுதியில், குஷ்பு வசிக்கிறார் என்றால், நக்மாவின் தங்கை ஜோதிகா வீடு பெசன்ட் நகரில் உள்ளது. சென்னைக்கு வரும் போதெல்லாம், அந்த வீட்டில் தான், நக்மா தங்குகிறார். அதை காரணம் காட்டி, மயிலாப்பூரில் போட்டியிட நக்மா முடிவு செய்துள்ளார்.
தன்னுடைய இந்த விருப்பத்தை, அகில இந்திய மகளிர் காங்., தலைவர் ஷோபா ஓஜாவிடமும் கூறியுள்ளார் அதற்கு, ஓஜா சம்மதிக்கவில்லை. இருப்பினும், கட்சித் தலைவர் சோனியா மற்றும் துணை தலைவர் ராகுல் அனுமதி பெற்று, 'சீட்' வாங்கி, மயிலாப்பூரில் போட்டியிட அவர் தீவிரமாக உள்ளார். இதற்காக, அகில இந்திய மகளிர் அணி பொது செயலர்
பதவியையும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறார். இதனால், மயிலாப்பூர் தொகுதியை தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு ஒதுக்கினால், நக்மாவுக்கும், குஷ்புவுக்கும் இடையில் தொகுதியை பெற கடும் மோதல் ஏற்படும். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


* கடந்த, 2001 சட்டசபை தேர்தலில், தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், பா.ஜ., வேட்பாளர் கே.என்.லட்சுமணன் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
* கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., - காங்கிரஸ், - பா.ம.க., கட்சிகள் அமைத்த கூட்டணி சார்பில், மயிலாப்பூர் தொகுதியில், தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

- நமது நிருபர் -
மல்லுக்கட்டுவதால், காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு உருவாகி உள்ளது. சென்னை மயிலாப்பூர் தொகுதியை, கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுப்பதையே, தி.மு.க., வழக்கமாகக் கொண்டுள்ளது. அதனால், தி.மு.க., கூட்டணியில் தற்போது காங்கிரஸ் இணைந்துள்ளதால், அந்தத் தொகுதி, காங்கிரசுக்கே விட்டுக் கொடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட அகில இந்திய காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு விரும்புகிறார். குஷ்புவுக்காக, அவரது ஆதரவாளர் மயிலை அசோக் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: