சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினர், ஐவரணியினரின்
வீடுகளுக்கும், தி.மு.க.,வினர், 'ஒன்மேன் குரூப்' வீடுகளுக்கும்,
'சூட்கேஸ்'களுடன் படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை
தேர்தலை எதிர்கொள்ள, அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேர்தலில்
போட்டியிட விரும்புவோரிடமிருந்து, பிரதான கட்சிகள் எல்லாம், விருப்ப
மனுக்களை பெற்றுள்ளன.புதிய பட்டியல்:
அ.தி.மு.க.,வை பொறுத்தமட்டில், தனியார் துப்பறியும் நிறுவனம், உளவுத் துறை, ஐவரணி, விருப்ப மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரிகள் அணி என, நான்கு தரப்பினர் தரும், வேட்பாளர்கள் பட்டியல் அடிப்படையில், தொகுதிக்கு மூவர் என்ற புதிய பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களை நேர்காணலுக்கு அழைக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவுகெட்ட ஜென்மங்கள் இந்த கோடிகளைவைத்து, நல்ல தொழில்சாலைகள் தொடங்கினால் பலருக்கு தொழில் வாய்ப்பும், அரசியலைவிட நல்ல பேரும், வருமானமும் வரும். சில செம்புகள் மேக் இன் இந்தியா work out ஆகுதுன்னு கருத்து எழுதும். நஷ்டம் வந்தால், அரசியலில் இது சகஜம் என்று போனால் போகுது கருப்பு பணம் தானே என்று இருக்கலாம்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான, பிப்., 24க்குள், பட்டியலை இறுதி செய்து, முதல்கட்டமாக, சில தொகுதி களுக்கு நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அனேகமாக, மார்ச், 3க்குள், 200
- நமது நிருபர் - தினமலர்.com

தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம்., மீதமுள்ள, 34
தொகுதிகள் மட்டும், அ.தி.மு.க., கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஒதுக்கப்
படும் என, தெரிகிறது.
அதனால், நேர்காணலுக்காக தயாராகும் மூன்று பேர் பட்டியலில், தங்களது பெயர் இடம் பெற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க.,வினர் பலர், சென்னையில் உள்ள ஐவரணியினரின் வீடுகளுக்கு,தங்களது விருப்ப மனுவின் நகல் மற்றும் கட்சி பணிகள் குறித்த விவரங்களுடன் படையெடுத்து வருகின்றனர்.
அப்படி செல்லும் போது, கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்ட, 'சூட்கேஸ்'களையும், காரில் எடுத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கு, வரும், 22 முதல், 27 வரை, அக்கட்சியின் தலைமையகமான அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.
'ஒன் மேன் குரூப்:'நேர்காணலுக்கு அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் பலர், அ.தி.மு.க. ,வினரைப் போல, 'சூட்கேஸ்'களில் பணத்தை நிரப்பி தயாராக உள்ளனர். நேர்காணலின் போது, 'தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்?' என கேட்கும் போதே, பணத்தை எடுத்து காட்டுவதோடு, அதை கட்சித் தலைமையிடம் கொடுக்கவும் தயாராக உள்ளனர்.
அத்துடன், எப்படியும், 'சீட்' பெறவேண்டும் என்பதற்காக, தி.மு.க.,வினரும் குறுக்கு வழியில் முயற்சிக்கும் தகவல்களும் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக, தி.மு.க., தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரைச் சந்தித்து, 'எவ்வளவு வேண்டுமானாலும் கட்சிக்கு அப்பாற்பட்டு செலவு செய்கிறேன். சீட் மட்டும் வேண்டும்' என, கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னி லைப்படுத்தும், 'ஒன் மேன் குரூப்'பிடமும், அவர்கள் இதே போல பேரம் பேசி வரும் தகவலும் வெளியாகி உள்ளது. கேட்காமலேயே கொடுக்க தயார்:
இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
எப்படியாவது தேர்தலில் போட்டியிட, 'சீட்' வாங்கிவிட வேண்டும் என,
அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வில் முட்டி மோதுகின்றனர்.
ஐவரணியோ, ஒன் மேன் குரூப்போ, பணம் எதுவும் கேட்காமலேயே, கட்சியினர் தரத்
தயாராக உள்ளனர். அதனால், சென்னையின் லாட்ஜுகளில் தங்கியிருக்கும்
கட்சியினர் பலர், பணப் பெட்டிகளுடன் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மொத்தத்தில், ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு வரும் வரையில்,
சென்னையில், 'சூட்கேஸ்களின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்.இவ்வாறு கட்சி
வட்டாரங்கள் கூறின.அதனால், நேர்காணலுக்காக தயாராகும் மூன்று பேர் பட்டியலில், தங்களது பெயர் இடம் பெற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க.,வினர் பலர், சென்னையில் உள்ள ஐவரணியினரின் வீடுகளுக்கு,தங்களது விருப்ப மனுவின் நகல் மற்றும் கட்சி பணிகள் குறித்த விவரங்களுடன் படையெடுத்து வருகின்றனர்.
அப்படி செல்லும் போது, கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்ட, 'சூட்கேஸ்'களையும், காரில் எடுத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கு, வரும், 22 முதல், 27 வரை, அக்கட்சியின் தலைமையகமான அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.
'ஒன் மேன் குரூப்:'நேர்காணலுக்கு அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் பலர், அ.தி.மு.க. ,வினரைப் போல, 'சூட்கேஸ்'களில் பணத்தை நிரப்பி தயாராக உள்ளனர். நேர்காணலின் போது, 'தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்?' என கேட்கும் போதே, பணத்தை எடுத்து காட்டுவதோடு, அதை கட்சித் தலைமையிடம் கொடுக்கவும் தயாராக உள்ளனர்.
அத்துடன், எப்படியும், 'சீட்' பெறவேண்டும் என்பதற்காக, தி.மு.க.,வினரும் குறுக்கு வழியில் முயற்சிக்கும் தகவல்களும் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக, தி.மு.க., தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரைச் சந்தித்து, 'எவ்வளவு வேண்டுமானாலும் கட்சிக்கு அப்பாற்பட்டு செலவு செய்கிறேன். சீட் மட்டும் வேண்டும்' என, கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னி லைப்படுத்தும், 'ஒன் மேன் குரூப்'பிடமும், அவர்கள் இதே போல பேரம் பேசி வரும் தகவலும் வெளியாகி உள்ளது. கேட்காமலேயே கொடுக்க தயார்:
- நமது நிருபர் - தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக