செவ்வாய், 12 ஜனவரி, 2016

ஜல்லிகட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை ...

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதியளித்த மத்திய அரசின் உத்தரவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பல அமைப்புகள் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என் வி ரமணா தீர்ப்பு.
 ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனி நபர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்திய விலங்குகள் நல வாரியம் என்பது, மத்திய அரசின்கீழ் இயங்கினாலும், தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். 22 உறுப்பினர்கள் கொண்ட அந்த வாரியத்தில் சிலர் மட்டுமே அரசு அதிகாரிகள், பெரும்பாலானோர் அதிகாரிகள் அல்லாதவர்கள்.


இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இவ்வாரியத்தின் தலைவர் ஆர்.எம்.கர்ப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அரசின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்வதாக இருந்தால், ராஜினாமா செய்துவிடுங்கள் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

வாரியத்தின் பல உறுப்பினர்களுக்கும், இதேபோன்ற தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக, உறுப்பினர்களில் சிலர் புகார் கூறியுள்ளதாக, ஆங்கில முன்னணி பத்திரிகை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றும் கூறி உள்ளது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: