வெள்ளி, 15 ஜனவரி, 2016

இளையராஜாவின் 1000 ஆவது அட்டகாசம் தாரை தப்பட்டை

சென்னை: சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் கரகாட்ட கலையை மையமாகக்கொண்டு இன்று வெளியாகி இருக்கும் படம் தாரை தப்பட்டை. இசைஞானி இளையராஜாவின் 1௦௦௦ மாவது படம் என்ற பெருமையுடன் வெளியாகி இருக்கும் தாரை தப்பட்டை படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன. இந்நிலையில் தணிக்கைக் குழுவினரால் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்ட தாரை தப்பட்டை ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதைப் பார்க்கலாம்.
தாரை தப்பட்டை படத்தின் முதல் பாதி கதை மிகவும் பழமையாக இருக்கிறது, இரண்டாவது பாதிக்காக காத்திருக்கிறேன்" என்று கார்த்தி தெரிவித்திருக்கிறார்.
தாரை தப்பட்டை கண்டிப்பாக பாலா ரசிகர்களுக்கான படம். பழைய சரக்கை பழைய பாட்டிலிலேயே ஊற்றிக் கொடுத்திருக்கின்றனர். மொட்டை மற்றும் வரலட்சுமியின் நடிப்பு மட்டுமே படத்தைக் காப்பாற்றுகிறது" என்று பிரகாஷ் பதிவிட்டிருக்கிறார்.
முதல் 30 நிமிஷம் இளையராஜா பிஜிஎம், வரலட்சுமி நடிப்புனு செமயா இருந்துச்சு. இன்டர்வல்ல T.R படமா (ரயில் பயணமா))மாறிடுச்சு" என்று தாரை தப்பட்டையை கலாய்க்க செய்திருக்கிறார் ஷமீர்.
இளையராஜாவுக்கு கட் அவுட் வழக்கமாக படத்தின் ஹீரோவுக்குத்தான் கட் அவுட் வைப்பார்கள். ஆனால் தாரை தப்பட்டை திரையிடப்பட்டுள்ள சென்னை தியேட்டர்கள் சிலவற்றில் இளையராஜாவுக்கும் கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.
/tamil.filmibeat.com/

கருத்துகள் இல்லை: