அண்ணா தலைமையில் 1941-ல் சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட
சம்பூரணத்தம்மாள் (95), திருச்சியில் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார்.
திருச்சி திருவானைக்கா துரைசாமி தோட்டத்தில் 12.10.1941-ல் சின்னையா-
சம்பூரணத்தம்மாள் ஆகியோருக்கு சீர்திருத்த திருமணம் நடைபெற்றது.
பெரியார் வழியைப் பின்பற்றி தமிழ்நாட்டில் அண்ணா நடத்தி வைத்த முதல்
சீர்திருத்த திருமணம் அது. இவர்களது மகன்கள் இளங்கோவன், தமிழ்மணி,
புகழேந்தி மற்றும் மகள் மணி மேகலை. இவர்களில் இளங்கோ வன் ஏற்கெனவே
காலமாகிவிட் டார். கள்ளக்குறிச்சி முன்னாள் திமுக எம்எல்ஏ கேசவலுவின்
மனைவிதான் மணிமேகலை. 24 ஆண்டுகளுக்கு முன்பே சின்னையா இறந்துவிட்டார்.
திருவானைக்கா தம்பிராம் தெருவில் வசித்து வந்த சம்பூரணத்தம்மாள், உடல் நலக்
குறைவால் நேற்று உயிரிழந்தார். சம்பூரணத்தமாள் உடல் நேற்று தகனம்
செய்யப்பட்டது.
சம்பூரணத்தம்மாள் உடலுக்கு திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு
உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேற்று அஞ்சலி செலுத்தினர். ஆசிரியையான
சம்பூரணத்தம் மாள் குளித்தலை பொற்செல்வி இளமுருகுவின் தங்கை ஆவார். கடந்த
ஆண்டு திருச்சி வந்த திமுக பொருளாளர் ஸ்டாலின் சம்பூரணத்தம்மாளை சந்தித்து
நலம் விசாரித்தார்.தமிழ்.ஹிந்து,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக