ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ஜெயலலிதா : சாலை பாதுகாப்பு வார விழா வாழ்த்துச் செய்தி: சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாத வாழ்க்கை....

ஒவ்வொருவரும் சாலை விதி களைப் பின்பற்றி பயணத்தை விபத்
தில்லாததாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டு உள்ளார்.
27-வது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
இந்தாண்டு ‘சாலைப் பாது காப்பு செயல்பாட்டுக்கான தரு ணம்’ என்ற கருப்பொருளை மையப் படுத்தி 27-வது சாலைப் பாது காப்பு வார விழா இன்றுமுதல் வரும் 16-ம் தேதி வரை கடைபிடிக்கப் படுகிறது. தமிழகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 2015-16-ம் நிதியாண்டில் சாலைப் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.65 கோடியை அரசு ஒதுக்கியது.    தமிழ்நாட்டின் மிகப்பெரிய விபத்தே இவகதாய்ன்..அது ஜனங்களுக்கு இன்னும் புரியல்ல...திரும்ப திரும்ப இந்த விபத்து நாட்டுக்கு இருந்து கொண்டே இருக்கும்...அவ்வளவு அடிமைங்க இருக்காங்க 

சாலை விபத்துகளின்போது விலை மதிப்பில்லா மனித உயிர் களைக்
காப்பாற்றும் வகையில் மாநில மற்றும் தேசிய நெடுஞ் சாலைகளில் 50 கி.மீ. இடைவெளி யில் அவசர விபத்து சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின் றன. இதேபோன்று நெடுஞ்சாலை களில் நடக்கும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறியவும், சாலை விபத்துகளில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தவும் 24 மணி நேரமும் நெடுஞ்சாலை ரோந்துப்பணி காவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
தமிழ்நாடு அரசு பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைப் பிடித்தால் மட்டுமே விபத்துகளைத் தவிர்க்க முடியும். எனவே, இது செயல்பாட்டுக்கான தருணம் என் பதை ஒவ்வொருவரும் உணர்ந்து சாலை விதிகளை பின் பற்றி பயணத்தை விபத்தில்லாததாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று வாழ்த்துச் செய்தியில் முதல் வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்.ஹிந்து.com

கருத்துகள் இல்லை: