சனி, 16 ஜனவரி, 2016

சுனந்தா புஷ்கர் மரணத்திற்கு விஷம்தான் காரணம்..சசிதரூரின் மனைவி

டெல்லி:காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான />இந்த சூழலில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலில் சுனந்தா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பலத்த சந்தேகங்களை உருவாக்கியது. சுனந்தாவின் உடல் பிரேத பரிசோதனையை எய்ம்ஸ் மருத்துவமனை நடத்தியது. பிரேத பரிசோதனை குழுவுக்கு தலைமை தாங்கிய டாக்டர் சுதீர் குப்தா கூறுகையில், சுனந்தாவிற்கு இயற்கைக்கு மாறாக உடனடி மரணம் நேரிட்டுள்ளது. அவரது உடலில் சில காயங்கள் இருந்தன. ஆனால் இந்த காயங்களுக்கும், அவரது மரணத்துக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்திருந்தார்.
சுனந்தாவி–்ன் உள் உறுப்புகளை மேலும் ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுனந்தா மரணம் குறித்த ஆய்வறிக்கையை இரண்டு மாதங்களுக்கு முன்பாக டெல்லி போலீசாருக்கு அமெரிக்காவின் எப்பிஐ அனுப்பி வைத்தது. அதில் சுனந்தா உடலில் விஷதன்மையுள்ள  எவ்வித பொருள்களும் இல்லை என கூறப்பட்டிருந்தது.

  இதற்கிடையில் சுனந்தாவின் உள் உறுப்புகள் சோதனை குறித்த இறுதி அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனை டெல்லி போலீசில் தாக்கல் செய்துள்ளது. அதில் சுனந்தாவின் மரணத்திற்கு விஷம் காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே இரண்டு முறை சசிதரூரிடம் சுனந்தா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு விட்ட நிலையில், மீண்டும் விசாரணை நடத்த டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் பாசி தனது டுவிட்டரில் கூறுகையில், சுனந்தா விவகாரத்தில் எய்ம்ஸ் பரிந்துரையை பெற்றுள்ளோம். சுனந்தா மரணம் இயற்கையான முறையில் நடைபெறவில்லை.  இந்த வழக்கை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவுக்கான சிறப்பு கமிஷனர் தீபக் மிஸ்ரா விசாரணை நடத்தி வருகிறார். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.dinakaran.com

சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணத்திற்கு விஷம் காரணமாக இருக்கலாம் என எய்ம்ஸ் மருத்துவமனை தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி இருவரும் காதல் மணம் புரிந்து கொண்டனர்.இதற்கிடையில் பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெகர் தரூடன் சசிதரூருக்கு தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது. இதனால் இருவரின் மண வாழ்க்கையில் புயல் வீசியது. இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை: