திங்கள், 11 ஜனவரி, 2016

ஏசி சண்முகத்தின் எம்ஜியார் கல்வி நிறுவனம் கூவத்தை ஆக்கிரமித்து கட்டிடம்....மகஇக போராட்டம்

எம்.ஜி.ஆர். கல்வி நிறுவனம் என்ற பெயரில் செயல்படும் தனியார்
நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி சென்னை மதுரவாயலில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மகஇக அமைப்புகள் இன்று மருத்துவக் கல்லூரி முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனால் கல்லூரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டு, தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி இன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே அக்கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது மருத்துவக் கல்லூரியின் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டுவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவள்ளுர் ஆட்சியரே பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனை ஏற்று ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. தற்போது கூவம் ஆற்றின் பகுதிகளிலோ வேறு எந்த இடத்திலோ அரசு நிலம் எதையும் ஆக்கிரமிக்கவில்லை. அவதூறு பரப்பும் குழுக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. nakkheeran,in

 snapjudge.wordpress.com

ரொம்ப நாள் கழித்து (மூன்று மாதமாவது இருக்கும்) சன் செய்திகள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. DVR வந்தபிறகு சன் செய்திகளும் சீரியல்களும் பார்க்க முடிவதில்லை.
புதிய நீதிக் கட்சியின் ஏசி சண்முகம் நடத்தும் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியை இடித்துத் தள்ளினார்கள். நூலகம், மாணவர் விடுதி, மருத்துவக் கல்லூரி வளாகங்கள் புல்டோசப்பட்டது. அறுபது கோடிக்கு மதிப்பிடப்படும் கட்டிடங்கள், ‘அண்ணாமலை‘ ரஜினியின் வீட்டை இடிப்பது போல் சர்வமும் நாசமாக்கப்பட்டது.
போன வாரம் பெய்த மழையில் கூவம் நதி பிரவாகமெடுத்து ஓடியதற்கு காரணமாக பலவற்றை முன்வைக்கிறார்கள்:
  • ஆற்றுப் படுகைகளில் மணல் திருட்டு
  • நதிக்கரைகளில் அத்துமீறி கட்டப்பட்ட நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு
  • ஆற்று நீர் ஓடுவதை குறுக்கிய குடிசைகள், கடைகள்
  • போதிய அளவு அணைக்கட்டுகள் இல்லாதது
  • இன்னும் இருக்கலாம். கூவம் நதிக்கரையில் அமைந்த ம.கோ.ரா. பல்கலையின் மூன்று கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தை வளைத்து வளர்ந்திருப்பதாக குற்றம் சாட்டி இடித்தும் முடிந்துவிட்டது.
    கல்லூரி ஆரம்பிக்கையில் வகுப்புகள் மட்டுமே கொண்ட கட்டிடங்கள்தான் முதலில் எழுந்திருக்கும். பொறியியல் வருமானம் பெருக ஆரம்பித்தவுடன் நூலகம் தொடங்கப்பட்டிருக்கும். மேலும் வருவாயை ஈட்ட உபரியாக மருத்துவம் பயில்விக்கத் தொடங்குவார்கள். தொடர்ச்சியாக வரும் வெளியூர் மாணவர்களுக்காக விடுதி அமைக்கப்பட்டிருக்கும்.
    இடப்பற்றாக்குறையால் நீர் வரத்தில்லாத கூவத்தின் தலையில் எம்ஜியார் பல்கலை விரிந்துவிட்டது. தொலநோக்கு இல்லாததை மட்டும் குற்றம் கூறாமல், ஆரம்ப நிலையில் அதிக விலை கொடுத்து பெரிய அளவில் நிலத்தை வாங்க முடியாததும் இவ்வித ‘வளர்ச்சி’க்கு காரணமாக இருந்திருக்கலாம்.
    ஆறரை ஏக்கர் பரப்பளவு கொண்ட நூலகம்; ஆயிரம் மாணவர்களுக்கு மேல் தங்கக்கூடிய விடுதி ஆகியவற்றை காலி செய்ய 24 மணி நேரம் கெடு கொடுக்கப்பட்டது.
    இந்த அகற்றலின் மூலம் நான்கு கிராமங்களின் சேதம் கட்டுக்குள் அடங்கும் என்கிறார்கள்.
    இரு வருடங்களுக்கு முன்பே நேற்று இடிக்கப்பட்ட இடங்களை அகற்றிவிடுமாறு அரசாணை சென்றிருக்கிறது. 2003-இல் இருந்து ஒன்றுமே செய்யாமல் இருந்ததன் பலன் நேற்று இடிந்து விழுந்திருக்கிறது.
    மிகவும் வருத்தமான நிகழ்வு.
    ஆனால், இரும்புக் கரம் கொண்டு காருண்யம் பார்க்காமல், முதலியார் வாக்கு வங்கி கணக்குப் போடாமல், லஞ்சம் பெற்றுக் கொண்டு விட்டு விடாமல் — நதியின் பாதையை சீரமைக்கும் ஜெயலலிதாவைப் பாராட்டலாம்.
  • கருத்துகள் இல்லை: