சனி, 16 ஜனவரி, 2016

தடையை மீறி மஞ்சு விரட்டு..போலீசார் தடுத்ததால் பாலமேட்டில் பரபரப்பு ! மக்கள் காளைகளை அவிழ்த்து...

மதுரை: பாலமேடு அருகே தடையை மீறி வட மஞ்சு விரட்டு நடத்தியதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடைவிதித்து. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. Near Palamedu despite the ban of jallikattu மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள், மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றும் பாலமேட்டில் காலை மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கண்டன பேரணி நடத்தினார்கள். இந்நிலையில் பாலமேடு அருகே உள்ள ராஜா கல்பட்டியில் வட மஞ்சு விரட்டு போட்டி நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது கிராம மக்கள் காளைகளை அவிழ்த்து விட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காளைகள் அவிழ்த்து விடப்படுவதை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய விளையட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்தாண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது மதுரை, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுர் உள்ளிட்ட கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

://tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை: