வியாழன், 14 ஜனவரி, 2016

ஜல்லிகட்டு தடை...தமிழ்நாட்டுக்கு என்ன செய்தியை சொல்கிறது?

ஜல்லிக்கட்டுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டதைத் தொடர்ந்து,
தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், 'மாநில அரசே அவசர சட்டம்வர முடியும்.அப்படி தமிழக அரசு, அவசர சட்டம் கொண்டு வருமானால், அதற்கு, மத்திய அரசும் முழு ஆதரவாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.'தடையை மீறுவோம்...' மாடுபிடி வீரர்கள் ஆவேசம்: 'ஜல்லிக்கட்டு நடத்த உரிய அனுமதி கிடைக்கவில்லை எனில், திட்டமிட்டபடி, ஜல்லிக்கட்டை நடத்துவோம்' என, மாடுபிடி வீரர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். மாடுபிடி வீரர்கள் கூறியதாவது:
லெனின் பாபு, பட்டதாரி, அவனியாபுரம்:எட்டு ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறேன்; மாடுகளை சாமியாக கும்பிடுகிறேன். ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையில், கடந்த ஆண்டு, ஜன., முதல் தேதி முதல், விரதம் இருந்தேன். இந்த ஆண்டும், விரதம் இருந்து வருகிறேன். சாமி, விரதம் என, பக்தியுடன் தான் களத்தில் விளையாடுகிறோம். பாரம்பரியம் தொடர, தடையை மீறி நடந்தால் அதில் பங்கேற்பேன்.>பாலமுருகன், மாடுபிடி வீரர், அவனியாபுரம்: நான், 30க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளேன். இந்த ஆண்டு போட்டியிலும் பரிசுகளை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளேன். அதற்காக, அசைவம் சாப்பிடாமல், விரதத்துடன் அனைத்து பயிற்சியையும் தொடர்கிறேன். தடை என்ற அறிவிப்பு, அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது; அதை நாங்கள் மீறி நடத்துவோம்.

பாண்டியம்மாள், பட்டதாரி, அவனியாபுரம்:பாட்டனார் காலம் முதல், வீட்டில் ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கிறோம்; சாமியைப் போல் நினைக்கிறோம். கோவில்களில் மாடு, சாமி கும்பிட்டு, களத்தில் நின்று விளையாடி, எங்களுக்கு பெருமை சேர்ப்பது, காலம் காலமாக தொடரும் பாரம்பரிய சிறப்பு; அதை தடை செய்வதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சிறப்பு சட்டங்கள் அமல்படுத்தி, ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்.
Advertisement

சுப்புராஜ், விழாக்குழு பொருளாளர், பாலமேடு: ஜல்லிக்கட்டு நடக்கும் என்றநம்பிக்கை மக்கள் மனதிலும் ஏற்படுத்தப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், திடீரென தடுத்து நிறுத்துவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அரசின் மீது, மக்கள் அதிக எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர். எங்கள் எதிர்ப்புகளை உண்ணாவிரதத்தின் மூலம் காட்டி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



ஜல்லிக்கட்டுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால், பெரும் துயரத்தில் உள்ளோம்; இந்த வேளையில் தீக்குளிப்பு, உண்ணாவிரதம் போன்ற உடலை வருத்தும் போராட்டங்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என, கேட்டுக் கொள்கிறேன்.
- தமிழிசை சவுந்தரராஜன்
தலைவர், தமிழக பா.ஜ.,


டில்லி விரைகிறது பா.ஜ., குழு:
ஜல்லிக்கட்டு நடத்த, உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று கூடியது. அதில், ஜல்லிக்கட்டை நடத்த, அவசர சட்டம் நிறைவேற்ற முடியாது என, முடிவெடுக்கப்பட்டது. மேலும், தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றினால், மத்திய அரசு துணை நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, மத்திய அரசை வலியுறுத்த, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன் மற்றும் தமிழக தலைவர்கள் அடங்கிய குழு, இன்று டில்லி செல்கிறது.

ஜல்லிக்கட்டுக்கு தடை தொடரும்:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட், நேற்று முன்தினம் இடைக்கால தடை விதித்தது; இதை எதிர்த்து, ஜல்லிக்கட்டு போட்டி ஆர்வலர்கள் சார்பில், ஐந்து மேல் முறையீட்டு மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில், நேற்று தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள், நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 'சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உத்தரவிடலாம்' என, மனுதாரர்கள் கூறுகின்றனர்; இந்த வாதம், கவனத்தில் கொள்ளத்தக்கதாக இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க முடியாது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com 

கருத்துகள் இல்லை: