கடலூர்: பல லட்சம் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதையோ அடிமாடாக
கொண்டு செல்வதையோ பீட்டா போன்ற அமைப்புகள் தட்டிக் கேட்காமல்
ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை விதிக்க போராடுகிறது என்று சாடியுள்ளார்
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
Pon. Radhakrishnan condemns
கடலூரில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு நடவடிக்கை
எடுக்கும். ஜல்லிக்கட்டு அனுமதிக்காக அனைத்துவித ஏற்பாடுகளும் நடைபெற்று
வருகின்றன. இந்த ஆண்டு மகிழ்ச்சி பொங்கலாக இருக்கும்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க டெல்லி செல்கிறேன். லட்சக்கணக்கான
மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை பீட்டா கேட்கவில்லை. அடிமாடுகளாக
கொண்டு செல்லப்படுவதையும் பீட்டா அமைப்பு தடுக்கவில்லை.
அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக மட்டும் பீட்டா தொடர்ந்து
செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
/tamil.oneindia.com/
/tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக