வியாழன், 9 ஏப்ரல், 2015

பஸ்ஸில் சென்றவர்களை பிடித்துச் சென்று கட்டிவைத்து சுட்டுக் கொன்றார்கள்: பலியானவரின் தம்பி அதிர்ச்சி தகவல்

திருப்பதி அருகே நடந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் தப்பி வந்தவர் கொடுத்த தகவலை யடுத்து, பஸ்ஸில் சென்ற தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் பிடித்துச் சென்று கட்டி வைத்து சுட்டுக் கொன்றார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதி யில் செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி 20 தமிழர்களை நேற்று முன்தினம் அம்மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன் றனர். கடத்தல் காரர்களை சுற்றி வளைத்தபோது, அவர்கள் தங்களை தாக்கியதாக வும் தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், இது போலி என்கவுன்ட்டர் என்றும் திட்டமிட்டே தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கூறிவருகின்றன. நிச்சயமாக சந்திரபாபு  நாயுடுவுக்கு   தெரிந்தே  இந்த கொலைகள்நடந்திருக்கிறது .யாரையோ காப்பாற்ற  கவனத்தை  திசை திருப்ப  இந்த  படுகொலைகள் ?

உடல்கள் ஒப்படைப்பு
என்கவுன்ட்டரில் இறந்தவர் களில் 8 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும் 8 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும் 4 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களது உடல்கள், திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாத் மற்றும் வேலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இவர்கள் முன்னிலையில் நேற்று காலை பிரேத பரிசோதனை நடத்தப் பட்டது. முதல்கட்டமாக 7 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு நேற் றிரவு உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டன.
பலியானவர்களில் ஒருவரான முனுசாமியின் தம்பி கருணாகரன், நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 6-ம் தேதி திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்த எனது அண்ணன் முனுசாமி உட்பட 8 பேர் திருப்பதியில் இருந்து திருத்தணிக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நகரி யில் பஸ்ஸை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட ஆந்திர போலீஸார், 8 பேரை சந்தேகத் தின் பேரில் கீழே இறக்கி விசாரித் தனர். அவர்களிடம் இருந்து சேகர் என்பவர் தப்பி கண்ணமங்கலம் வந்தார். 7 பேரை ஆந்திர போலீஸார் விசாரணைக்காக கொண்டு சென்றி ருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், மறுநாள் அந்த 7 பேரும் சேஷாசலம் வனப்பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டது தெரியவந்தது.. இவர் களுடன் மேலும் 13 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.
சித்ரவதை
ஆந்திர போலீஸார் வேண்டு மென்றே, தமிழக கூலித் தொழிலா ளர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அவர்களின் கைகளைக் கட்டி சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியால் வெகு அருகில் இருந்து சுட்டுக் கொன்றுள்ளனர். இறந்தவர்களின் மார்பு, வயிற்றுப் பகுதிகளில் பலருக்கு வெட்டுக் காயங்கள் உள்ளன. சிலருக்கு சூடு வைத்த காயங்களும் உள்ளன. எனவே, இது போலி என்கவுன்ட்டர்தான். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு கருணாகரன் கூறினார்.
என்கவுன்ட்டரில் தப்பி வந்த முருகாபாடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (48) தெரிவித்த அதே தகவல்களையே அனந்தாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தமூர்த்தியும், ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
திருப்பதியில் மரம் வெட்டச் செல்வதற்கு 20 பேர் கும்பலை வெங்கடேசன் என்பவர் ஏற்பாடு செய்து அனுப்பியுள்ளார். என்கவுன்ட்டர் சம்பவத்துக்குப் பிறகு அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆந்திர டிஜிபி மறுப்பு
என்கவுன்ட்டர் நடந்த இடத்தை ஆந்திர மாநில டிஜிபி ராமுடு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால்தான் என்கவுன்ட்டர் செய்ய நேரிட்டது. இறந்தவர்களில் சிலர், பஸ்ஸில் செல்லும்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் என கூறுவது முற்றிலும் தவறு. கடந்த 6 மாதங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மர கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகின் றனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்துக்கு முன்புகூட கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் செம் மரங்களை வெட்டி மாட்டுவண்டி களில் கடத்தும் காட்சிகள் ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன’’என்றார்.
150 ஆந்திர அரசு பஸ்கள் நிறுத்தம்
திருப்பதி சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நேற்று நடந்த போராட்டங்களின்போது சில இடங்களில் ஆந்திர அரசு பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு இயக்கப்படும் 150 ஆந்திர அரசு பஸ்கள் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டன.
இது தொடர்பாக ஆந்திர அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, “பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆந்திர பஸ்கள் இன்று (நேற்று) நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க முயற்சித்து வருகிறோம். இயல்பு நிலை திரும்பிய பிறகு பஸ்கள் மீண்டும் இயக்கப்படும்’’ என்றனர்  /tamil.thehindu.com/india

கருத்துகள் இல்லை: