டெல்லி: டெல்லியில் பிரபலமான கல்லூரி ஒன்றில் பேராசிரியை ஒருவரை
அவருடன் பணிபுரியும் ஆண் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் வேலை பார்த்த பேராசிரியை ஒருவரை அவருடன்
பணியாற்றிய ஆண் நபர் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த
சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்துள்ளது. ஆனால் வீடியோ தற்போது தான்
யூடியூப்பில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளதாவது,
ஒரு அறையில் ஆண் நபர் பேராசிரியையுடன் பேசிக் கொண்டிருக்கையிலேயே அவரை தனது
செல்போனில் புகைப்படம் எடுக்க முயல்கிறார். இதைப் பார்த்த அந்த பெண்
புகைப்படம் எடுக்காதீர்கள் என்று கூறி அவரின் செல்போனை தட்டிவிடுகிறார்.
இதனால் கடுப்பான அந்த நபர் பேராசிரியையை அடித்து, தலை முடியைப் பிடித்து
இழுக்கிறார். இதை பார்த்த பிறர் ஓடி வந்து அவர்களை விலக்கிவிடுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பேராசிரியையை தாக்கிய நபரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையே கல்லூரியில் முறையாக நடக்கவில்லை என்று கூறி பேராசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அந்த பேராசிரியை கூறுகையில், குப்தா எனப்படும் அந்த நபர் அடிக்கடி என் அறைக்கு வந்து தொல்லை கொடுப்பார். என்னை தகாத வார்த்தைகளால் திட்டுவார், அசிங்கமாக பேசுவார், மிரட்டுவார். சம்பவம் நடந்த அன்றும் அவ்வாறு செய்கையில் என்னை புகைப்படம் எடுக்க முயன்றார். அதை தடுத்த என்னை தாக்கிவிட்டார் என்றார்
Read more//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக