அதிரடி படையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டதால்தான் தமிழக தொழிலாளர்கள் மீது என்கவுன்ட்டர் நடத்தியதாகவும் இது முடிவு அல்ல ஆரம்பம் என்றும் ஆந்திர மாநில வனத் துறை அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து ஆந்திர மாநில வனத் துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: போலீஸார் மீது ஆயுதங்களால் கடத்தல் கும்பல் தாக்கியது. இதனால்தான் போலீஸார் தற்காப்புக்காக சுட நேர்ந்தது. என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களே. பல முறை எச்சரிக்கை செய்தும் ஏன் இவர்கள் பணத்துக்காக ஆசைப்பட்டு மரங்களை வெட்ட இங்கு வர வேண்டும்?
இவர்களுக்கு வனப்பகுதியில் என்ன வேலை? ஆந்திர போலீஸார் செய்தது சரிதான். இது முடிவு அல்ல ஆரம்பம். இதுகுறித்து நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் உண்மை வெளிவரும். ஆந்திர வனப்பகுதிகளில் செம்மரங்கள் கடத்தப்படுவதை முற்றிலுமாக தடுக்க அரசு தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். /tamil.thehindu.com நம்ம ஆளுங்க திருப்பதிக்கு போயி ஏன்தான் துட்டை கொட்டுராய்ங்களோ ? சூடு சுரணை இருக்கா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக